Pages

Friday, March 4, 2016

துபாயில் கல்வி விழிப்புணர்வை வலியுறுத்தி நடந்த நடையோட்டம் !

துபாய் : துபாய் கேர்ஸ் அமைப்பின் சார்பில் கல்வி விழிப்புணர்வை வலியுறுத்தி நடையோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நடையோட்டம் கிரீக் பார்க்கில் தொடங்கியது. உலகம் முழுவதும் பொதுவாக மாணவர்கள் குறைந்த பட்சம் 3 கிலோ மீட்டர் நடந்து பள்ளிக்கூடம் செல்வதை நினைவு கூறும் விதமாக இந்த நடையோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பள்ளி மாணவர் விவேகானந்தன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

அவர் கூறியதாவது : வாசிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது வீட்டிலேயே நூலகம் ஒன்றை நடத்தி வருவதாகவும், இந்த நூலகத்தை தனது கட்டிடத்தில் வசிக்கும் மாணவர்களும், அருகில் வசித்து வரும் மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று நூல்களை படித்து வருவதாகவும் கூறினார்.

மறைந்த இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் உந்துசக்தி படி இந்தப்பணியினை மேற்கொண்டுவருவதாக கூறினார். இந்த நடையோட்டத்தில் தனது நூலக நண்பர்களுடன் கலந்து கொண்டுள்ளதாகவும் கூறினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...