Pages

Saturday, March 5, 2016

இனிப்பு !

சுவையில் சிறந்ததுதான்
சுகம்தரும் இனிப்பென்பேன்
அவைஆக்கும் எலும்புறுதி
அருமூளைக் குணர்வூட்டும்!

உடலைப் படைத்தவனோ
உயிர்ஊதி மண்ணில் விட்டான்
கடைநாளும் விதித்து விட்டான்
கட்டாயம் திருப்பிடுவான்!

வாழ்ந்து முடிக்கவில்லை
வருமின்பம் ஒன்றுமில்லை
வீழ்ந்து மடிவதுதான்
விளங்கிடும் வாழ்க்கையாமோ?

உடலுக்குள் "சுகர் "எனவே
படைகளும் சுழச்சென்றாய்
தடைபோட சக்திஇன்றி
சஞ்சீவி கைவிரித்தார்!
(சஞ்சீவி -மருத்துவர்)

கொழுப்பின் வீரியத்தை
அழுத்தத்தின் ஆங்காரத்தை
அழகிய இதயத்திற்குள்
ஆட்டங்கள் துணையாமோ?

இருந்தாற்போல் கூடுகின்றாய்
இருதயம் பதைக்கச் செய்தாய்!
வருந்தியே இருக்கையிலே
வற்றி நீ ஆட்டம் செய்வாய்!

ஊசியால் குத்தியுன்னை
ஒருகைப் பார்ப்போமென்றால்
நேசித்த டங்கிவிட்டே
நிறைநிலா போல்வருவாய்!

ஊழல் பெருகியதால்
ஊடியே தாக்கினையோ
கோழைகள் பெரும்பொருளைக்
கொள்ளை யடித்ததாலோ!

ஏரிகள் குளங்கள் தூர்த்தே
ஏலமும் போட்டிடாமல்
சேரிகள் அமைத்ததாலா
சிங்கார வீட்டினாலோ?

அளவோடு சாப்பிடென்றே
அண்ணலும் அன்று சொன்னார்
பிடியெனப் பிடித்தான் இனிப்பே
பிடித்துநீ கொண்டாய்போலும்!

முத்தமிழ் போலவந்த
முக்கனி சாப்பிடாதே
வித்துக்கள் வகையும்வேண்டாம்
விழுங்குமென் கோதுமைதான்!

உட்சென்றாய் இனிப்பாய் உடலில்
வெளியேற்றம் இறப்பி னோடே!
பாம்பு பெயர் நல்லபாம்பு
பட்டமோ உனக்கோ "இனிப்பு "!


'கவிஞர்' அதிரை தாஹா
ஓய்வுபெற்ற ஆசிரியர்
கவிஞர் - எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்


6 comments:

  1. தாஹா சார் அவர்களின் இனிப்பு ரொம்ப தெவிட்டாத இனிப்பு பலே டேஸ்ட்.

    ReplyDelete
  2. ஐயா, நான் மதுரையைச் சேர்ந்தவர், அதிரையில் உங்களை நன்கு அறிந்தவர்கள் இருப்பினும், மதுரையில் உங்களை அறிந்தவர்கள் உண்டு. உங்களின் படைப்புகளுக்கு கருத்து இட எனக்கு தகுதி இல்லை அய்யா.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...