Pages

Friday, March 4, 2016

ப்ளக்ஸ் பேனர்களை அகற்ற உத்தரவு !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது. 
தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று  (04.03.2016) முதல் அமுலுக்கு வந்துள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் விழிப்புடன் மேற்கொள்ள வேண்டுமென்றும், அனைத்து விதமான ப்ளக்ஸ், பேனர்களை அகற்றுவதற்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமெனவும், சாலையோர பதாகைகளை அப்புறப்படுத்துவதற்கும் அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், பறக்கும் படை கண்காணிப்பு குழுக்களும், கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவேண்டுமெனவும், ஒவ்வொரு சட்ட மன்றத் தொகுதிகளிலும், கலந்தாய்வு கூட்டங்களை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டுமெனவும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் அறிவுறுத்தினார்.

மேலும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்த போது, பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு 3 நாட்களுக்கு முன்பாக முன் அனுமதி பெற வேண்டுமெனவும், கட்சிகளின் கொடிக் கம்பங்கள்  அகற்றப்பட வேண்டுமெனவும், தொலைக்காட்சி, செய்தித்தாள், துண்டு பிரசுரம் போன்ற விளம்பரங்களுக்கு முன் அனுமதி சான்று பெற வேண்டும் எனவும், நகர்ப்புறங்களில் வீட்டு உரிமையாளர்கள் அனுமதித்தாலும், சுவர்களில் விளம்பரம் எழுதுவதற்கு அனுமதி இல்லை. கிராமப்புறங்களில் வீட்டு உரிமையாளர்களின் அனுமதியுடன் சுவர் விளம்பரம் எழுதலாம்.  வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும். இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கட்சிகளின் கொடிகளுக்கு அனுமதி பெற வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.என்.மயில்வாகணன், ,சார் ஆட்சியர் திரு.ம.கோவிந்தராவ், வருவாய் கோட்டாட்சியர் ஜெய்பீம், தேர்தல் வட்டாட்சியர் ராமலிங்கம் மற்றும் தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...