Pages

Saturday, March 5, 2016

உடல்நிலை பாதிப்படைந்த அதிரை வாலிபருக்கு வீடு கட்டி கொடுத்து உதவிய லண்டன் இம்தியாஸ் !

அதிரை எம்.எஸ்.எம் நகரை சேர்ந்தவர் எம். முஹம்மது புஹாரி. இவரது மகன் ஜெஹபர் சாதிக் ( வயது 30 ) இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப வருமானத்திற்காக கடந்த 8 ஆண்டுகளாக தக்வா பள்ளி அருகே தட்டு வண்டி ஓட்டி வந்தார். கிடைத்த சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென இவரது கால்கள் இரண்டும் செயல் இழந்து நடக்க முடியாமல் மிகவும் அவதிபட்டார். இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை மேற்கொண்டார். இதுதொடர்பாக வாலிபரின் பெற்றோர் சார்பில் நிதி உதவி கோரி இருந்தனர்.

இதையடுத்து அதிரை நியூஸ் சார்பில் இதன் உண்மை நிலை ஆராயப்பட்டு, பின்னர் செய்தி வெளியிடப்பட்டது. இவற்றை பார்வையிட்ட உலகங்கிலும் உள்ள அதிரை, வெளியூர் மற்றும் வெளிநாடுவாழ் அன்பர்கள் நேரடியாகவும் வங்கி கணக்கின் வழியாகவும் நிதிஉதவி அளித்தனர்.

இதில் லண்டன் வாழ் சமூக ஆர்வலரும், தொடர்ந்து வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவிகளை தானாக முன்வந்து உதவி வருகின்ற அதிரையின் 'இளம் கொடைவள்ளல்' எஸ்.ஏ இம்தியாஸ் அஹமது ரூ 11 ஆயிரம் அனுப்பி உதவினார்.

இதுதொடர்பாக அதிரை நியூஸில் கடந்த [ 30-11-2015 ] அன்று வெளியிடப்பட்ட செய்தியில் இடம்பெற்ற குடிசை வீட்டின் புகைப்படங்களை கண்டு மனம் உருகிய எஸ்.ஏ இம்தியாஸ் அஹமது வாலிபரின் குடும்பத்திற்கு ஆஸ்ப்ரோ சீட்டில் வீடு கட்டி கொடுக்க முன்வந்தார். ரூ 55 ஆயிரம் அனுப்பிவைத்தார். இதையடுத்து இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து முடிந்தது. புனரமைக்கப்பட்ட வீட்டில் வாலிபரின் குடும்பம் இன்று காலை குடியமர்த்தப்பட்டன.

புனரமைக்கப்பட்ட வீட்டின் மொத்த செலவுத்தொகை ரூ 70 ஆயிரம், மீதமுள்ள ரூ 15 ஆயிரத்தை பணியை எடுத்து செய்த வெல்டர் அப்பு, உடல் நிலை பாதிப்படைந்த வாலிபர் குடும்பத்தின் பரிதாப நிதி நிலையக் கண்டு தனது சொந்த பணத்தை கொடுத்து உதவினார்.

அதிரை நியூஸ் ஆசிரியர் சேக்கனா நிஜாம், ஆதம் நகர் ஜமாத் நிர்வாகி வாப்பு மரைக்காயர், வெல்டர் அப்பு ஆகியோர் புனரமைக்கப்பட்ட வீட்டை இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டனர்.

வீடு கட்டி கொடுத்து உதவிய எஸ்.ஏ இம்தியாஸ் அஹமது, அவரது சகோதரர் இத்ரீஸ் அஹ்மது, இந்த செய்தியை உலகெங்கும் எடுத்துச்சென்ற அதிரை நியூஸ் ஆசிரியர் சேக்கனா நிஜாம், ஆதம் நகர் ஜமாத் நிர்வாகி வாப்பு மரைக்காயர், வெல்டர் அப்பு, மருத்துவ உதவி அளித்த அனைத்து நல் உள்ளங்கள் ஆகியோருக்கு வாலிபரின் குடும்பத்தினர் தனது நன்றியை தெரிவித்தனர்.

 
வீடு கட்டுவதற்கு முன்னதாக இருந்த குடிசையின் படங்கள்
 

8 comments:

 1. பல நல்ல மணங்கள் ஒருங்கிணைந்து இந்த நற்பணியை செய்து இருக்கின்றன. இதன் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் பொழிவானாக.

  குறிப்பாக சகோதரர் இம்தியாஸ் அவர்கள் இதே போல் வெளியே தெரியாமல் பல உதவிகளை தேவையானவர்களுக்கு கைம்மாறு கருதாமல் தேவையானவர்களுக்கு தேவைப்பட்ட காலத்தே செய்து உதவி இருக்கிறார்.

  இவ்வாறு துயரப்படுவோர்களின் துயரங்களை பங்கிட்டுக் கொள்ள பலரும் முன்வந்தால் சமூகத்தில் வறுமை நீங்கும்.

  சகோதரர் இம்தியாஸ் அவர்களை வெறுமனே பாராட்டுவதோடு நிற்காமல் அவரது அன்பு உள்ளம் போல் அனைவரும் உதவும் கரங்களைப் பல சகோதரர்கள் பரவலாகப் பெற வேண்டும்.

  ReplyDelete
 2. பல நல்ல மணங்கள் ஒருங்கிணைந்து இந்த நற்பணியை செய்து இருக்கின்றன. இதன் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் பொழிவானாக.

  ReplyDelete
 3. பல நல்ல மணங்கள் ஒருங்கிணைந்து இந்த நற்பணியை செய்து இருக்கின்றன. இதன் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் பொழிவானாக.

  ReplyDelete
 4. இது போன்ற உதவி செய்பவர்கலுக்கு அல்லாஹ் துணை நிற்பான் உதவி செய்த இம்தியாஸ் மற்றும் அப்பு அவர்களுக்கும் மற்றும் இதற்கு பெறும் முயற்சி எடுத்த இத்ரீஸ் அவர்களுக்கும் நன்றி ,

  ReplyDelete
 5. மாஷா அல்லாஹ். சிறந்த செயல். உதவியவருக்கும் உதவி செய்ய தூண்டியவருக்கும் அல்லாஹ் அதற்கான கூலியை இம்மையிலும் மறுமையிலும் வழங்குவானாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

  ReplyDelete

 6. மாஷா அல்லாஹ். சிறந்த செயல். உதவியவருக்கும் உதவி செய்ய தூண்டியவருக்கும் அல்லாஹ் அதற்கான கூலியை இம்மையிலும் மறுமையிலும் வழங்குவானாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

  ReplyDelete
 7. மாஷா அல்லாஹ். சிறந்த செயல். உதவியவருக்கும் உதவி செய்ய தூண்டியவருக்கும் அல்லாஹ் அதற்கான கூலியை இம்மையிலும் மறுமையிலும் வழங்குவானாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

  ReplyDelete

 8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
  இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
  இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
  நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து 
  இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
  அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்....

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...