Pages

Tuesday, March 1, 2016

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அதிரை சேர்மன் !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 16 மற்றும் 17 வது வார்டு பகுதிகளுக்கு மிலாரிக்காடு பகுதியில் உள்ள பம்ப் மோட்டார் மூலம் குடிநீரை பெற்று மேலத்தெரு நீர்த்தேக்க தொட்டியில் சேமித்து மறுநாள் காலை இந்த பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படும்.

இந்நிலையில் மிலாரிக்காடு பகுதியில் அமைந்துள்ள பம்ப் திடீரென பழுது ஏற்பட்டதால் இந்த பகுதிகளுக்கு கடந்த சில வாரங்களாக குடிநீர் சீராக வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டது.

இதுதொடர்பாக இந்த பகுதியினர் சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். பம்பில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய கோயமுத்தூருக்கு பம்ப் அனுப்பப்பட்டுள்ளது என்றும், இன்னும் சில தினங்களில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வழங்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் அளித்த உறுதியின்படி இன்று காலை வரை குடிநீர் சீராக வழங்கப்படவில்லை இதனால் அதிருப்தி அடைந்த இந்த பகுதியினர் அதிரை சேர்மன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் வெளியேறிவரும் குடியிருப்பு கழிவு நீரை தடுத்து வாய்க்கால் அமைத்து தருதல், பம்பிங் மூலம் ஆற்றுநீரை காட்டுக்குளத்திற்கு கொண்டு வர பைப் பாதை அமைக்க உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றுவதில் ஏற்படும் நிர்வாக அலுவலர்களின் தாமதத்தை கண்டித்து போராட்டம் நடந்தது.

சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தில் அதிரை சேர்மன் எஸ்.ஹெச் அஸ்லம், திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், சமூக ஆர்வலர்கள் முஹம்மது இப்ராஹீம், ஜெஹபர் அலி, கவுன்சிலர் முஹம்மது யூசுப், சன் டீ முனாஃ ப், சகாபுதீன், அயூப், ஜாஹிர், மல்ஹர்தீன், சாகுல் ஹமீது, அனஸ், கமாலுதீன், சைஃபுதீன் உள்ளிட்ட அதிரை ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அதிரை காவல் நிலைய போலீசார் முன்னிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி மற்றும் பேரூராட்சி பணிகள் உதவி இயக்குனர் தொலைபேசியில் அளித்த உறுதியை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

16 comments:

 1. பேருராட்சி சேர்மேன் திறம்பட பணியை செய்ய தெரியாமல் பேருராட்சி சேர்மன் உள்ளிருப்பு போராட்டம் செய்தது மிகவும அசிங்கம் ,

  ReplyDelete
  Replies
  1. ஆளும் கட்சி வேண்டும் என்று செய்யும் செயலுக்கு நீயும் உடந்தையாக இருப்பது வேதனையே. ஒரு வேலை ADMK விலிருந்து அழைப்பு வந்துவிட்டதா

   Delete
  2. கடந்த மன்ற கூட்டத்தை புறக்கனித்து விட்டு மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டதாக பணம் பெற்றுக்கொண்ட தம்பி செரீப் பனி சிறக்க வாழ்த்துக்கள்

   Delete
 2. அதிரடியாக போராட்டத்தின் மூலம் செயல்கள் வெற்றி பெற இருக்கும் சேர்மனுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. நல்லது செய்தாலும் திட்டுறாங்க.செய்யவில்லை என்றாலும் திட்டுறாஙக.கூட்டு சேர்ந்து கொல்லை அடிச்சா மட்டும் மேடை போட்டு வாழ்த்துறாங்க.என்னப்பா அரசியல்.

  தம்பி சரிஃப்பின் கருத்தில் கட்சின் உட்பூசலின் அசிங்கம் வெளிப்படுகிறது.

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. கடந்த கூட்டத்தை புறக்கனித்து விட்டு மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டதாக பணம் பெற்று கொண்ட தம்பி செரீப் பனி சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. தம்பி ஷரீப், மக்கள் பொது சேவையில் இருக்கும் ஒருவரை தாக்கி பேசுவதிலும் சில வரைமுறை இருக்கிறது. எல்லாவற்றுக்கும் உன் சுய நல எண்ணத்தில் அரசியல் எதிரியாக காட்டிகொள்வது முறையல்ல. சிறியார் செய்த வேளாண்மை வீடு வந்து சேராது என்ற கதையாக இருக்கிறது உன்னுடைய பதிவுகள். பொது வாழ்வில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது தம்பி.

  ReplyDelete
 7. மன்ற கூட்டம் நடைபெறவும் இல்லை கூட்டத்தை புறக்கணிக்கவும் இல்லை,கூட்டம் நடத்தும் முன் கையெழுத்து போடப்பட்டது ,கூட்டம் நடந்தாலும் நடக்காமல் இருந்தாலும் அரசு படி கொடுக்கப்பட்டு வருகிறது தேவையானல் இந்த பணம் தேவைப்பட்டால் நீ வாங்கிக்கொள் இந்த பணத்தை வைத்து நான் கோட்டை கட்ட மாட்டேன் ஆனால் அதிமுகவில் இருந்துக் கொண்டு இப்படி பேசுவது நாகரிகம் கிடையாது அப்துல் ரஹ்மான்

  ReplyDelete
  Replies
  1. எங்க அப்பன் குதிருக்குள் இல்லை?
   புறக்கனித்து விட்டு பணம் வாங்குவது முறையா?தம்பி செரீப்.
   காலியார் தெருவில் சாக்கடை கட்டும்போது தன் வீட்டுக்கு மட்டும் 3"பைப் போடுவது நியாயம்தானா?
   தம்பி செரீப்.............

   Delete
 8. இப்றாகீம் நீங்கள் என்னிடம் நேரடியாக விவாதிக்க தயாரா

  ReplyDelete
 9. நெய்னா அவர்களே அதிமுகவில் சீட்டு கேட்டுவிட்டு நான் திமுக வில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடவில்லை

  ReplyDelete
  Replies
  1. சரீப், உனக்கு அரசியல் அனுபவம் அல்லது வயது அனுபவம் எதுவும் இல்லை. நீ ராஜினாமா செய்து விடு...உன்னுடய வீட்டிற்க்கு 3 குழாய் போட்டிருக்கியாமே...இது ஒரு வகை சுய நலம் மற்றும் ஊழல்.. நீ இந்த பதவிக்கு லாயக்கில்லாதவன்.. நீ கவுன்சிலராக வந்தது உன்னுடைய அப்பா மர்ஹூம் ஜக்கரியா அவர்களால் தான்

   எந்த கட்சியில் இருப்பது என்பது முக்கியமில்லை, மக்களுக்கு என்ன செய்தோம் என்பது தான் முக்கியம்

   Delete
 10. தயவு செய்து ஊரில் நல்லது நடந்தால் வாழ்த்துங்கள், ஊருக்கும் உங்களுக்கும் கேடுவிளைவிக்கும் செயலாக உங்களுக்கு பிடிக்கவில்லையா உண்மையிலேயே தவறு நடக்கிறதா நடவடிக்கை எடுங்கள், அநியாயமாக குறை கூறிக்கொண்டு வெறுமனே சேற்றை வாரி தூற்றிக்கொள்ளாதீர்கள். இப்படி செய்வதால் அவதூறுகள் கூட ஒவ்வொருவரும் சொல்லிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

  ReplyDelete
 11. மேற்குறிப்பிட்டவர்கல் சேர்மேன் குடும்பம் இவர்கள்,இருந்தாலும் போட்டோவோடு கமெண்ட்ஸ் கொடுக்கவில்லை இதுபொன்னயன் நீ ஆணாக இருந்தால் திருத்து பெய்ப்பின்னய் நேராகவோ அல்லது காவல்துறை மூலமாக நிரூபித்து. காத்து உடன் பதவி விலகத் தயார்

  ReplyDelete
 12. மேற்குறிப்பிட்டவர்கல் சேர்மேன் குடும்பம் இவர்கள்,இருந்தாலும் போட்டோவோடு கமெண்ட்ஸ் கொடுக்கவில்லை இதுபொன்னயன் நீ ஆணாக இருந்தால் திருத்து பெய்ப்பின்னய் நேராகவோ அல்லது காவல்துறை மூலமாக நிரூபித்து. காத்து உடன் பதவி விலகத் தயார்

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...