Pages

Thursday, March 24, 2016

மனிதன் மாறிவிட்டான்!

விடிய விடிய
விழித்திருக்கும் வானுக்கு
விண்மீன்களே
கண்கள்!

தூங்காத கண்களுக்கு
துணை எது?
"சிந்தனை! "
மாவுலகம் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்!

உணவில் மாற்றம்
உடையிலே மாற்றம்
தொழிலிலே மாற்றம்
அன்றாட வாழ்விலே
மாற்றம்!

கூறைவீடு மாறிவிட்டது
கோபுரங்கள் மீறிவிட்டன!
வீதிகள் அமைப்பு
வினோத சமைப்பு!

திண்ணைகள் உள்ள
வீடுகள் அன்று
சுற்று சுவரில்
வீடுகள் இன்று

வெட்டவும் கொத்தவும்
வீதிகள் அமைக்கவும்
வினோத இயந்திரம்

விவசாய வேலை
வீழ்ந்து போனது
வியப்பாய் கட்டிடம்
சூழ்ந்து கொண்டது!

உழைப்பின்றி பெண்கள்
ஓய்வு பெற்றனர்
ஊதிய மின்றி!

விசேட நாளில்
விருந்து இருந்தது போக
இன்று
நாளொரு விருந்து
அறுசுவைப் பந்தி!

இரவில் திருமணம்
நிகழ்ந்தது அன்று
முறைகள் மாறி
முற்பகல் பிற்பகல்
முடியும் திருமணம்
பந்தியோ பந்தி
பலநாள் படைப்பு!

மாமிச உணவு மலையென
குவிய
மண்டிட உணவை
மயக்கம்! நோய்கள்
கொண்டன ஆட்சி!
புலால் உணவைக்
குறைக்கப்
புரட்சியும் எழுந்தது!

கழிவறை வீட்டில்
கண்ணைப் பறிக்குது!

சிலசில வேலையில்
சினிமாப் பார்த்தோம்
சிறந்த வாழ்க்கையாம்
சிக்கின வீடுகள்
தொலைக் காட்சிப்
பெட்டிகள்
தொட்டன வீட்டை
காலையில் சினிமா
மாலையில் சினிமா
இரவில் சினிமா
நேரம் நொடியெலாம்
சினிமா சினிமா

வறையறை இன்றி
வாழ்க்கை மாற்றம்
பண்பு மாற்றம்
பழக்கம் மாற்றம்
ஒழுக்கம் போனது

ஒப்பனை மிஞ்சி!
அப்பனை மிஞ்சி
பிள்ளைகள் பேச்சி
ஆத்தாளை மிஞ்சி
அட்டகாசங்கள்!

நேரம் பார்த்துஉண்டிடாமல்
சிறுசிறு நோய்கள்,
கண்ணிலே பார்வை,
பிரச்சனை!

முறைகள் பேணி
தொலைப் பேசி
வைத்தால்
ஒருவரும் குறைகள்
உரைப்பதற் கில்லை!

பண்பாடு மாறி
பாதையும் மாறி
மூச்சும் பிணியுடன்
முன்னேறிப் போகுது!

இயல்புக்கு மாறாய்ப்
பிள்ளைப் பிரசவம்
முயன்று பாலை நிறுத்தி
முட்டக்குடிக்குதுப்
புட்டிப் பாலை!

மற்றவர் மொழியில்
மாண்புறு கல்வி
மணித்தமிழ் வீட்டில்
மாற்றான் பிள்ளை!

குணத்திலே மாற்றம்
பணத்திலே ஓட்டம்!
அரசியல் குப்பை
அலங்கார மானது!

ஃபாஸ்ட் உணவே
பறிமாறப் படுமே
வேஸ்ட்டாம் உறவுகள்
விலக்கி வைக்குது!

மணவாழ்வு மந்திரம்
மலைஏறிப் போனதால்
முறிவு முருங்கைக்
கொப்பாய் வாழ்க்கை!

மரத்தை வெட்டி
மழையை நிறுத்தினான்
மலையை உடைத்து
எரிமலை படைத்தான்!

மனிதாபி மானம்
மருந்துக்கு மில்லை!
பேசியில் காதல்
நாசிக்குக் கேடு!

வலைதள வாழ்வில்
இளைஞர் சேர்க்கை
வர்ணப் படங்களில்
வாழ்க்கையே சோகம்!

வாழும் போது
தெரியாத வாழ்க்கை
மீண்டும் என்ன
வரவாப் போகுது!

காலம் மாறவில்லை
உலகம் மாறவில்லை
மனிதனே மாறிவிட்டான்!


'கவிஞர்' அதிரை தாஹா
ஓய்வுபெற்ற ஆசிரியர்
கவிஞர் - எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...