Pages

Friday, March 4, 2016

சிஎம்பி லேன் பகுதி ஆபத்தான மின்கம்பம் மாற்றி அமைப்பு !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வது வார்டு சிஎம்பி லேன் பகுதியில் உள்ள ஆபத்தான மின்கம்பம் மாற்றப்பட்டு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது.

இந்த பகுதியில் மின்கம்பம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இவற்றை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க இந்த பகுதி பொதுமக்கள் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையடுத்து அதிரை மின்சார வாரியம் சார்பில் புதிய மின்கம்பம் இந்த பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. எனினும் மின்கம்பத்தை நடுவதற்கு தொடர்ந்து காலமாதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் அதிரை பேரூராட்சியின் 21 வது வார்டு உறுப்பினர் முஹம்மது இப்ராஹீம் தீவிர முயற்சியின் கீழ், அதிரை மின்சார வாரியத்தின் சார்பில் புதிய மின்கம்பம் இன்று நடப்பட்டது. இதன் பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். பணிகளை கவுன்சிலர் முஹம்மது இப்ராஹீம் உடனிருந்து கவனித்தார். 

3 comments:

  1. இதை சாதாரணமான மனிதன் சுட்டிக்காட்டினாலே அதிரை மின் வாரியம் நடவடிக்கை எடுக்கும்.

    இவர் அப்பகுதியில் சொல்லிக்கொள்ளும் அளவிலான செயல் எதுவுமே இல்லை, உள்தெருவில் ஒர்சில இடத்தினுள் சிமெண்ட் சாலை (தேவையற்ற திட்டம்) போட்டது தவிர வேறொன்றுமில்லை என அப்பகுதியினறால் பேசப்படும் உண்மை நிலை.

    ReplyDelete
  2. பிலால் நகரில் மிக மிக ஆபத்தான நிலையில் பல மின் கம்பங்கள் உள்ளன.

    அவற்றைப் படம் பிடித்துப் பதிவெழுதி மின்வாரியத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டுகின்றேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...