Pages

Thursday, March 17, 2016

H1-B விசா மீண்டும் ஏற்கப்படும்: அமெரிக்கா அறிவிப்பு!

வேலை மற்றும் உயர் கல்வி காரணமாக அமெரிக்காவுக்குச் செல்பவர்களுக்கு வழங்கப்படும் H1-B விசா மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவில், சிறப்பான பணி எனப்படும் குறிப்பிட்ட துறையில் ஆழமான அறிவும், அனுபவமும், திறமைகளும் தேவைப்படும் பணிகளை செய்ய உரிய படிப்பும், திறமையும், அனுபவமும் கொண்ட அமெரிக்கர்கள் கிடைக்காத  நிலையில்,  நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து ஊழியர்களை வரவழைத்துக் கொள்ள வகை செய்யும் H1-B விசாவுக்கான சட்டம் 1990ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

இடையில் ஏற்பட்ட சில பிரச்னைகளை அடுத்து,  மீண்டும் H1-B விசா மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை 2016 - 17 -ம் ஆண்டுமுதல் அமலுக்கு வரும். அதாவது ஏப்ரல் 1-ம் தேதி முதல் விசாகள் ஏற்றுக் கொள்ளப்படும். முதற்கட்டமாக 20 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். இதுவரை வருடத்துக்கு 65 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டன. முதல் 5 நாட்களிலே 65 ஆயிரத்துக்கு அதிகமான விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் விண்ணப்பங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்த விசா சயின்ஸ், என்ஜினியரிங், கம்பியூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி:விகடன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...