Pages

Sunday, April 3, 2016

அதிரையில் நுங்கு சீசன் துவங்கியது: ₹10 க்கு, 3 சுளைகள் !

கோடை காலத்தில் மக்களின் சூட்டைத் தணிக்கும் நுங்கு சீசன் அதிரையில் துவங்கியுள்ளது. அதிரையை சுற்றி காணப்படுகிற மகிழங்கோட்டை, தொக்காளிகாடு, பழஞ்சூர், மளவேனிற்காடு, ராசியங்காடு, மஞ்சவயல் உள்ளிட்ட கிராம பகுதியிலிருந்து நுங்குகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

தற்போது கோடை வெப்பம் துவங்கியதை அடுத்து பொதுமக்களின் தாகத்தை தீர்ப்பதற்காக அதிரையின் பிராதான பகுதியாக கருதப்படுகிற தக்வா பள்ளி, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நுங்கு விற்பனை களைகட்டியுள்ளது.

பொதுமக்களும் வாகனத்தில் பயணம் செய்வோரும் நுங்கு சுளைகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.  ₹ 10 க்கு, 3 சுளைகள் வீதம் விற்க்கப்படுகிறது. இந்த பகுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் நுங்குகள் 1-மணி நேரத்தில் முழுவதுமாக விற்று தீர்ந்துவிடுவதாக நுங்கு வியாபாரிகள் கூறுகின்றனர்.

1 comment:

  1. ஒவ்வொரு சீசனுக்கும் எதோ ஒரு வகை பழங்கள் நம்மளை பழைய நினைவோடு மகிழ்விக்கும். நுங்கு மீது விரலைவிட்டு சாப்பிடும் போது அதன் நீர் நம் கண்கள்மீது பட்டு குளுர்விக்கும் சுகமே தனி; சிலருக்கு சட்டை, கைலியெல்லாம் வீனாலும் நுங்கின் சுவை எதையும் பொருட்படுத்தாது. வெயில்காலத்தில் தென்னந்தோப்பில் நுங்கை பறித்து வயிர்முட்ட குடித்து அருகிலுள்ள (கிராமத்தில்)ஓடையில் அல்லது குளத்தில் கும்மாளம் போட்டு வீடு திரும்புவதே .... என்ன சுகம் அடடா! நொங்கை பாலில் போட்டோ அல்லது மோரில் போட்டோ லெசியாக சாப்பிடலாம்.. நோகாமல் நொங்கு திங்க ஆசையா? ம்ஹும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...