Pages

Monday, April 4, 2016

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு !

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வரும் சட்டப்பேரவை தேர்தலை திமுக தலைமையில் காங்கிரஸ் எதிர்கொள்கிறது.

தமிழக அரசியல் களத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி அறிவிப்புதான் முதல் கூட்டணி அறிவிப்பாக இருந்தது.

இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி முடிவான நிலையில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. கடந்த 25-ம் தேதி முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் கருணாநிதியுடன் ஆலோசனை மேற்கொண்டனர். அன்றைய தினம் எந்த முக்கிய முடிவும் எட்டப்படவில்லை.

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி என பேசப்பட்டு வந்த நிலையில், இரண்டாவது முறையாக இன்று (திங்கள்கிழமை) சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

முன்னதாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், "காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீட்டில் நல்ல முடிவு ஏற்படும்" எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் 234 தொகுதிகளில் திமுக இதுவரை 54 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விவசாய தொழிலாளர் கட்சி, சமூக சமத்துவப் படை, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...