Pages

Monday, April 4, 2016

ஷார்ஜாவில் நடந்த ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி !

ஷார்ஜா: ஷார்ஜாவில் ஆட்டிசம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சார்ஜா இந்தியன் அசோசியசன் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை அல் நஜ்மா மையம் ஏற்பாடு செய்திருந்தது.

ஷார்ஜாவில் மனநலக் குறைபாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் மனநலக்குறைபாடு குறித்த விழிப்புணர்வும், அதனை தவிர்க்கும் வழிமுறைகள் பற்றியும் விவரித்தனர்.

இதில் கிரீன் குளோப் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஹுமைத் ஹபீப் தலைமையில் பங்கேற்றனர். ஹாரித் என்ற மாணவர் மனநலக் குறைபாட்டை தவிர்க்கும் முறை குறித்த உரை நிகழ்த்தியது பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது.

இந்த மாணவர்கள் அனைவரும் மனவளர்ச்சி குறைந்த மாணவர்களுடன் உரையாடும் சிறப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...