Pages

Friday, April 15, 2016

வெயில் தாக்கமும், மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளும் !

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக கூட்ட அரங்கில் கோடை வெயிலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும். பொது சுகாதாரம். உள்ளாட்சி. நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என், சுப்பையன். தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடை பெற்றது,

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தாவது:  
தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வெப்பநிலை உயர வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால் பொது மக்கள் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நேரமான மதியம் 12.00 மணிமுதல் பிற்பகல் 3.00 மணி வரை அவசியம் வெளியே செல்வதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் இதுகுறித்து பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது
1. குழந்தைகள் மற்றும் சிறுவர்களை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நேரணு;களில் விளையாடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். போதுமான அளவு குடிநீரினை பருக அறிவுறுத்த வேண்டும்.

2. வெள்ளை நிற பருத்தி ஆடைகள், எடைகுறைந்த தளர்வான ஆடைகள் மற்றும் காலணிகளை தவறhமல் அணிய வேண்டும்.

3. குளிர் கண்ணாடி, தொப்பி அல்லது துண்டு, குடை போன்றவற்றை பொதுமக்கள் வெளியில் செல்லும் போது பயன்படுத்த வேண்டும்.

4. உடல் உழைப்பு அதிகம் தேவைப்படுகின்ற வேலைகளை மதியம் 12.00 மணிமுதல் பிற்பகல் 3.00 மணி வரை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

5. பயணம் மேற்கொள்ளும் பொழுது போதுமான குடிநீர் மற்றும் ஓஆர்எஸ் கரைசல் போன்றவற்றை உடன் எடுத்து செல்ல வேண்டும்.

6. உடலில் நீரின் அளவை குறைக்கக்கூடிய மது, டீ, காபி, கார்பன் கலந்த குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

7. வாகனங்களை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் நிறுத்துவதை தவிர்ப்பதுடன் குழந்தைகள், காப்பிணி தாய்மார்கள் மற்றும் முதியவர்களை வாகனணு;களில் விட்டுச்செல்வதை தவிர்க்க வேண்டும்.

8. வெயிலின் தாக்கத்தால் உடலில் அதிக நீரிழப்பு ஏற்படும் பொழுது அதனுடன் சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுஉப்புகள் பெருமளவில் வெளியேறும் வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அவ்வப்பொழுது உப்புநீர்க்கரைசல், மோர், எலுமிச்சை சாறு, இளநீர் போன்ற உடலில் நீரின் அளவு மற்றும் தாதுஉப்பினை  அதிகப்படுத்தும் பானங்களை அவ்வப்பொழுது எடுத்துக் கொள்ள வேண்டும்.

9. வெயிலில் செல்லும் பொழுது மயக்கம் அல்லது உடல் சோர்வு ஏற்படின் நிழல் அதிகம் உள்ள பகுதிகளில் உடன் ஓய்வு எடுப்பதுடன் போதுமான அளவு நீரினை பருகியவுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

10. மேலும் பொதுமக்கள் மேற்கண்ட பொருள் குறித்து கூடுதல் ஆலோசனை தேவைப்படின் 104-ஐ தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறhர்கள்.

11. வெயிலின் தாக்கம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 1077 எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்,

12. பேருந்து நிலையங்கள். பேருந்து நிறுத்தங்கள் போக்குவரத்து பயணிகளுக்கு நிழல் தரும் இடங்கள் அமைக்கப்பட வேண்டும்,

13. எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை கவனத்துடன் கையாள வேண்டும்,

14. கால்நடைகளை கடும் வெயில் நேரத்தில் மேய்ச்சலை தவிர்க்க வேண்டும். கால்நடைகளுக்கு போதுமான குடிநீர் வசதி மற்றும் அவற்றை குளிர்விப்பதற்கு நீர் தெளிப்பான்களை பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்,என், சுப்பையன் தெரிவித்தார்

இக்கூட்டத்தில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர். சுப்பிரமணியன் மாநகராட்சி ஆணையர் வரதராஜன், மாநகராட்சி பொறியாளர் திரு. சீனிவாசன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் திரு. காளிமுத்து, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு. கோபு, உதவி இயக்குநர்  (பேரு்ராட்சிகள்) திரு. இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...