Pages

Saturday, April 2, 2016

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் தமீமுன் அன்சாரி சந்திப்பு !

எதிர்வரும் 16.5.2016 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுச் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை இன்று மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில், அவைத்தலைவர் நாசிர் உமரி, பொருளாளர் ஹரூன் ரசித், தலைமை ஒருங்கிணைப்பாளர் மவுலா, முகமது நாசர், துணைப் பொதுச்செயலாளர்கள் முகமது மைதீன் உலவி, ராவுத்தர் ஷா மற்றும் கொள்கை பரப்புச் செயலாளர்கள் செல்லச்சாமி ஆகியோர் நேரில் சந்தித்து, அ.தி.மு.க.விற்கு தேர்தலில் தங்களது கட்சியின் முழுமையான ஆதரவை தெரிவித்தனர்.

அவர்களுக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா நன்றியை தெரிவித்துக் கொண்டார். அப்போது அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...