Pages

Wednesday, April 20, 2016

அதிராம்பட்டினம் பகுதி மக்களின் வாக்கு யாருக்கு ?

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினம் சுற்று வட்டார பகுதி 1 லட்சத்திற்கும் குறைவில்லாமல் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இதனைச்சுற்றி ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், ராஜாமடம், மகிழங்கோட்டை, தொக்காலிக்காடு, பழஞ்சூர், மளவேனிக்காடு, ராசியங்காடு, நடுவிக்காடு, விலாரிக்காடு, உள்ளூர் புதுக்கோட்டை, கருங்குளம், மாளியக்காடு, சேண்டாக்கோட்டை, பள்ளிகொண்டான், முதல் சேரி, நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது. பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கக்கூடிய பகுதியாக அதிராம்பட்டினம் உள்ளது.

இதனால் இந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள்-கல்வியாளர்கள்-ஜமாஅத் பிரமுகர்கள்-கிராம பஞ்சயாத்தார்கள் ஆகியோரிடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் செலுத்த இருக்கும் உங்களின் வாக்கு யாருக்கு ? என்ற கேள்வியை முன்வைத்து ஆய்வு நடத்தினோம். இதில் கீழ்கண்ட கோரிக்கைகளை எந்த வேட்பாளர் நிறைவேற்றி தர உறுதி அளிக்கின்றாறோ அவருக்கே எங்கள் பகுதி மக்களின் வாக்கு என தெரிவித்தார்கள்.

அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பகுதி மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கைகள்:
1. திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப் பணியை விரைந்து முடிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

2. அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் அடிக்கடி நிகழும் விபத்தால் அதிகளவில் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்கும் பொருட்டு அதிரை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி 24 மணிநேரம் இயங்கும் மருத்துவமனையாக மாற்ற வேண்டும்.

3. அதிராம்பட்டினத்தில் தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.

4. அதிராம்பட்டினம் கடற்கரையை நவீனப்படுத்தி மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும்.

5. அதிராம்பட்டினத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

6. அதிராம்பட்டினத்தை புதிய தாலுகாவாக தரம் உயர்த்தி அறிவிக்க வேண்டும்.

7. அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை எதிரே உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் புறநகர் பகுதி புதிய பேரூந்து நிலையம் அமைக்க வேண்டும்.

8. தஞ்சை மாவட்டத்தில் மிகப்பெரிய பரப்பளவைவும், மக்கள் தொகையையும் கொண்டுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சியை பொதுமக்கள் நலன் கருதி நிர்வாக வசதிக்காக ஏரிபுறக்கரை வடக்கு - தெற்கு என இரண்டாக பிரிக்க வேண்டும்.

9. அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிபுறக்கரை ஈசிஆர் சாலையை ஒட்டி அமைந்துள்ள இரண்டு ஏரிகளையும் ஆளப்படுத்தி படகு சவாரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

10. ஏரிபுறக்கரை ஈசிஆர் சாலையில் அரசிற்கு சொந்தமான இடத்தில் தென்னை கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

11. அதிராம்பட்டினம் கடற்பகுதியில் உள்ள அரசின் நிலத்தில் நவீன கட்டமைப்புடன் கூடிய பூங்கா ஏற்படுத்த வேண்டும். இவற்றை சுற்றுலா பகுதியாக அறிவிக்க வேண்டும்.

12. அதிராம்பட்டினம் பகுதியில் ஏற்படும் மின் இழப்பு மற்றும் சீரான மின்சாரம் வழங்குவதற்காக துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

13. அதிராம்பட்டினம் சிஎம்பி லேன் - மிலாரிக்காடு - மேலத்தெரு - பிலால் நகர் - ஈசிஆர் சாலை ஆகியவற்றை இணைத்து புதிய கிராம இணைப்பு சாலை ஏற்படுத்தி அதில் மினி பேருந்து இயக்கும் வசதி ஏற்படுத்த வேண்டும்.

14. அதிராம்பட்டினம் - மதுக்கூர் வழியாக மன்னார்குடி வரை அரசு போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும்.

15. தினமும் அதிராம்பட்டினத்திலிருந்து சென்னை சென்று வர கூடுதலாக அரசு பேருந்து இயக்க வேண்டும்.

16. அதிராம்பட்டினம் பெரிய மீன் மார்க்கெட் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய மீன் விற்பனைக் கூடம், ஆட்டுத்தொட்டி கூடம் அமைக்க வேண்டும்.

17. சட்டமன்ற தொகுதி மேம்பாடு நிதி மூலம் அதிராம்பட்டினம் நடுத்தெரு பகுதியில் துணை நூலகம் அமைக்க வேண்டும்.

18. அதிராம்பட்டினத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு குளங்களை தூர் வாரி வருடந்தோறும் ஆற்று நீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

19. அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ள அபாயத்தை தடுக்கும் விதத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் வாய்க்கால் தூர் வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

20. பேரூராட்சி பகுதிகளில் தேங்கும் குப்பை கூளங்கள் அள்ளிச்செல்ல சட்டமன்ற தொகுதி மேம்பாடு நிதி மூலம் கூடுதலான டிராக்டர்கள் வழங்க வேண்டும்.

21. குடிநீர் பற்றாக்குறையை போக்க கடற்கரைத்தெரு பகுதியில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவை கொண்ட நீர்தேக்க தொட்டி கட்டித்தரவேண்டும்.

15 comments:

 1. இந்த கோரிக்கைகள் கடந்த பல ஆண்டுகளுக்குமேல் உள்ளவை இதனை நாங்கள் செய்து தருகின்றோம் என கூறி அதிரை மக்களை ஏமாற்றி ஓட்டுக்களை வாங்கி மூன்று முறை எம் எல் ஏவாக இருந்த என்.ஆர். ரங்கராஜனும் சரி ஒன்னும் செய்துகொடுக்கவில்லை. ஆகையால் இந்த முறை நாம் வார்த்தை ஜாலங்கள் சொல்லும் பிற கட்சி வேட்பாளர் ஆதரித்து ஓட்டாண்டியாக இருப்பதைவிட நமது மண்ணின் மைந்தன் இலியாஸ்க்கு ஓட்டுப்போட்டு வெற்றிபெற செய்யலாம். இதன்மூலம் அடுத்து வர கூடிய உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் பிற கட்சியினர் மக்களின் ஒற்றுமைக்கு பயந்து கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்த முன்வருவர். தம்பி இலியாஸ்க்கும் அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பர் இதனால் நமது பகுதி பளர்ச்சி பெறும்.

  ReplyDelete
 2. மண்ணிண் மைந்தன் நம்ம வீட்டுப்பிள்ளை தம்பி இல்யாஸ்க்கே. கேஸ் சிலிண்டர் சின்னத்திற்க்கே போடுங்கம்மா ஓட்டு கேஸ் சிலிண்டரைப் பார்த்து

  ReplyDelete
 3. தம்பி இல்யாஸ் போன் நம்பர் இருதாள் அனுப்பவும்

  ReplyDelete
 4. பட்டுகோட்டை தொகுதி வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்கும் ஊரு அதிரை; காரணம் ஒரு சமுதாயத்தின் ஓட்டுகள் ஒரு குறுப்பிட்ட கட்சிக்கு வாக்களித்து வந்தோம். வேட்பாளர் தெரிந்த நபரோ தெரியாத நபரோ அவர் சார்ந்த கட்சி திராவிடக் கட்சி ஒன்றுக்கே வாக்களித்து பழகிவிட்டோம். வேட்பாளர் தேர்வு பற்றி நாம் கவலைப்பட்டதில்லை காரணம் அரசியலில் நம் சமுதாய பங்கு மிக மிக குறைவு, தொகுதியில் 70 % மெஜாரிட்டியாக உள்ள மக்களை புறக்கணித்து விட்டு ?% குறுப்பிட்ட ஜாதியினரை வேட்பாளராக நிறுத்துவதை நாம் அறிவோம். இம்முறை 6 முனை போட்டி அதில் எந்தக் கட்சியும் நம் சமுதாய மக்களை கண்டுக்கொள்ள வில்லை. சமுதாயக் ஒற்றுமை அடிப்படையில் நம் சகோதரை (இல்யாஸ் )தேர்ந்தெடுப்பதுடன் மற்ற ஊருகளுக்கு முன்னுதாரணமாக நாம் திகழ்வோம். ஒற்றுமையே பலம் என்பதை நிருபிக்க நல்லதொரு வாய்ப்பு; வாக்களிப்போம்! வாக்கு சிதறாமல் !!

  20 கோரிக்கை அம்சங்கள் யாரு முன்னே வைத்தாலும் அதில் ஒரு சில வற்றை நிறைவேற்றலாம் அத்தனையும் நிறைவேறாத காரியம்.

  ReplyDelete
 5. அதிராம்பட்டினம் தொகுதியை ஒரத்தநாடு என்றும் பேராவூரணி என்றும் லவட்டிக் கொண்டு போய்விட்டார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் கோரிக்கை வைக்கிறோம். மறந்துவிட்டார்கள் . இந்தப் பட்டியலில் நாமும் அந்தக் கோரிக்கையை வைக்க மறந்துவிட்டோம்.

  ஊர் முழுதும் ஒன்று கூடி ஊர்க்காரர் ஒருவர் போட்டி இடுகிறாரே அவருக்கு வாக்களிப்பது என்று ஒருமனதாக தீர்மானிக்கும் உணர்வு நம்மிடம் இருக்கிறதா?

  ReplyDelete
 6. காமராஜர் முதல்வராக இருந்தபோது அதிராம்பட்டினம் தொகுதி இருந்தது. இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக திரு. ஏ. ஆர். மாரிமுத்து , எம். தண்டாயுதபாணி ஆகியோர் இருந்து இருக்கிறார்கள். பறித்ததை மீண்டும் கேட்போமே!

  ReplyDelete
 7. எங்கள் தொகுதி பட்டுக்கோட்டைக்கு முகம் தெரியாத யாரோ ஒருவர்க்கே காலங்காலமாக வாக்களித்தோம்; வென்றவரைச் சந்திக்கவும் இயலாது; முன்னாள் எம் எல் ஏ ரெங்கராஜனைத் தவிர . ஆனால் இப்பொழுது எஸ்டிபிஐயின் முடிவால் எங்கள் ஊரின் மைந்தன் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் எஸ்டிபிஐ தலைவர் சகோதரர் இல்யாஸ் அவர்கள் பட்டுக்கோட்டைத் தொகுதிக்கு வேட்பாளராகி விட்டதில் எங்களூர் முஸ்லிம்கள் மற்றும் மதுக்கூர் முஸ்லிம்கள் ஒட்டு மொத்த ஓட்டுகளும் எஸ்டிபிஐக்கே என்று பரவலாகக் கணிப்பு. அதிலும் பெண்கள் நாடோறும் கண் முன்னால் பார்க்கும் கேஸ் சிலிண்டர் என்பதால் நினைவில் நிற்கும் என்பதும் கூடுதல் பலம்; பெண்கள் மத்தியிலும் சகோதரர் இல்யாஸ் அவர்களுக்கே வாக்களிப்போம் என்று பேசிக் கொள்வதாகவும் ஊரிலிருந்து வரும் நற்செய்தியாகும். இன்ஷா அல்லாஹ் வென்றால், அதிரையிலிருந்து ஓர் அரசியல் அங்கம் பெற்றுத் தந்த பெருமை எஸ்டிபிஐக்கு உண்டு. எல்லாம் அல்லாஹ்வின் நாட்டம்.

  ReplyDelete
 8. எனது வாக்கு sdpi கட்சிக்கே..

  ReplyDelete
 9. A DEAD LION IS BETTER THAN A LIVING DOG.. MY FAMILY VOTE WILL BE SDPI....GAS CYLINDER.....LET'S REVOLUTION BEGINS.....VICTORY OR LOSE.IT DOESN'T MATTER....

  ReplyDelete
 10. A DEAD LION IS BETTER THAN A LIVING DOG.. MY FAMILY VOTE WILL BE SDPI....GAS CYLINDER.....LET'S REVOLUTION BEGINS.....VICTORY OR LOSE.IT DOESN'T MATTER....

  ReplyDelete
 11. A DEAD LION IS BETTER THAN A LIVING DOG.. MY FAMILY VOTE WILL BE SDPI....GAS CYLINDER.....LET'S REVOLUTION BEGINS.....VICTORY OR LOSE.IT DOESN'T MATTER....

  ReplyDelete
 12. A DEAD LION IS BETTER THAN A LIVING DOG.. MY FAMILY VOTE WILL BE SDPI....GAS CYLINDER.....LET'S REVOLUTION BEGINS.....VICTORY OR LOSE.IT DOESN'T MATTER....

  ReplyDelete
 13. என்னுடைய ஓட்sdpiகே

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...