Pages

Saturday, April 23, 2016

தஞ்சை மாவட்டத்தின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க பார்வையாளர்கள் குழு வருகை !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமையில் தேர்தல் ஆணையத்தின் தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர்கள் முன்னிலையில் அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்ட மன்ற தொகுதிகளுக்கான தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் பணிகளின் விபரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் விளக்கினார்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் தேர்தல் செலவின பார்வையாளர்கள் (Expenditure Observers) 5 பேர் வருகை தந்துள்ளார்கள்.  

திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய சட்ட மன்றத் தொகுதிகளின் தேர்தல் செலவின பார்வையாளர் திரு.மகேஷ்யாதவ்  அலைபேசி எண் 9489009453

கும்பகோணம் சட்ட மன்றத் தொகுதியின தேர்தல் செலவின பார்வையாளர் திரு.கம்லேஷ் மக்வானா அலைபேசி எண் 9489009438

திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய சட்ட மன்றத் தொகுதிகளின் தேர்தல் செலவின பார்வையாளர் திரு.வேணுதார் கோடெசி அலைபேசி எண் 9489009455

தஞ்சாவூர் சட்ட மன்றத் தொகுதியின தேர்தல் செலவின பார்வையாளர் திரு.மல்லிகார்ஜீன் உத்தார்  அலைபேசி எண் 9489009435

பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்ட மன்றத் தொகுதிகளின் தேர்தல் செலவின பார்வையாளர் திரு.நாகார்ஜுன் அலைபேசி எண் 9489009472  

இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.என்.எம். மயில்வாகணன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், கும்பகோணம் சார் ஆட்சியர் திரு.ம.கோவிந்தராவ், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் திரு.டி.எஸ்.ராஜசேகர், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...