Pages

Sunday, April 24, 2016

அதிரையில் திமுக நிர்வாகிகளுடன் வேட்பாளர் மகேந்திரன் சந்திப்பு !

அதிராம்பட்டினம் ஏப்-24
திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் மகேந்திரன் அவர்கள் அதிராம்பட்டினம் பேரூர் திமுக - காங்கிரஸ் - மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளை இன்று இரவு அந்தந்த கட்சிகளின் அலுவலகங்களில் மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆதரவு கோரினார்.

அதிரை பேரூர் திமுக அலுவலகத்தில் திமுக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி பாலசுப்பிரமணியம், பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் பா. இராமநாதன், அதிரை பேரூர் செயலாளர் இராம குணசேகரன், அவைத்தலைவர் ஜே. சாகுல் ஹமீது, துணைச் செயலாளர்கள் அன்சர்கான், தில்லை நாதன், பொருளாளர் கோடி முதலி, மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி, மீனவரணி பொறுப்பாளர் சுப்பிரமணி, ராஜதுரை, வார்டு பொறுப்பாளர்கள் அய்யாவு, முஹம்மது செரீப், முத்துராமன், நூர்லாட்ஜ் செய்யது, அஷரப், பா.கு பகுருதீன், இளைஞர் அணி பொறுப்பாளர் சாகுல்ஹமீது, நியாஸ் அஹமது உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
 
 

1 comment:

 1. பதிவுக்கு நன்றி.

  அன்று 1965-களில் எனக்கு பம்பரம், பளிங்கு, கிளித்தட்டு, தொட்டு விளையாடு, லாக்கு, போன்ற அனேக விளையாட்டுக்களை விளையாடும் வயசு,

  அன்றைய அசைக்க முடியாத சேர்மன் என்று பேர் போனவர் உங்கள் எல்லோருக்கும் தெரியும், அவர் வீட்டு (மர்ஹூம்) அஹமது தம்பி அவர்களின் திருமணம்.

  செக்கடித் தெரு,

  அப்போது அங்கே தென்னங் கீற்றுப் பந்தல்,
  தேங்காய்க் குலைகள்,
  வாழைமரத் தோரணங்கள்,
  தென்னங் கீற்றேல்லாம் வண்ணங்களால் பூசப்பட்டிருந்தது.

  அன்றே அது வெரி பவர்புல் கல்யாணமாக இருந்தது. வெகு சிறப்பாக முடிந்தது.

  அதிரை வெகுவாக குளுமையாக இருந்தது. அதிரை மக்களும் ரொம்பவே குளிர்ச்சியாக இருந்தார்கள்.

  இன்றைய அதிரையர்கள் எதையோ திருட்டு கொடுத்த மாதிரி அங்கும் இங்கும் அலைகின்றனர். இதெற்கெல்லாம் என்ன காரணம்?

  ஷிர்க்கு மட்டும் ஒழிந்தால் போதுமா?

  மனதில் உள்ள கருங் கசடும் சேர்ந்தே ஒழியனும்.

  என்றைக்கு கசடு ஒழிகின்றதோ அன்றைக்கே......................?

  K.M.A. Jamal Mohamed.
  President – PKT Taluk.
  National Consumer Protection Service Centre.
  State Executive Member
  Adirampattinam-614701.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...