Pages

Monday, April 4, 2016

துபாயில் தேசம் மறந்த ஆளுமைகள் நூல் வெளியீடு !

துபாய் : துபாயில் இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் சார்பில் தேசம் மறந்த ஆளுமைகள் என்ற நூல் வெளியீட்டு விழா அல் இப்ராகிமி உணவகத்தில் 01.04.2016 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத் தலைமை வகித்தார். அமீரகத்தில் கல்விப் பணியில் சிறந்த முறையில் பணியாற்றி வரும் திருச்சி பைசுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தமிழகத்தில் இருந்து வந்த பிரபல மருத்துவர் டாக்டர் அப்துல் லத்தீப் வெளியிட நத்தம் ஜாஹிர் ஹுசைன் பெற்றுக் கொண்டார். அவர் தனது உரையில் இந்திய விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள் பற்றிய தகவல்களை தொகுத்து ராபியா குமாரன் என்ற இளைஞர் வெளியிட்டுள்ளார். இன்றைய இளைஞர்கள் தேசத்தின் விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள் குறித்து தெரிந்து கொள்ள இயலாத சூழலில் இது போன்ற நூல்கள் மிகவும் பயனளிக்கு என்றார். இந்த பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் ராபியா குமரனுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த நூல் தமிழகம் முழுவதும் உள்ள கல்வி நிலையங்கள் அனைத்திலும் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்ற ஆவலை வெளியிட்டார். இந்த பணியில் ஒவ்வொரு பகுதியிலும் இருந்து வரும் சமூக அமைப்புகள் இந்த பணிக்கு உதவிட முன்வர வேண்டும் என்றார். டாக்டர் அப்துல் லத்தீப் அவர்கள் ஓய்வு பெற்ற அலாவுதீன் ஐ.ஏ.எஸ். அவர்களின் மூத்த சகோதரர் ஆவார்.

இந்த விழாவில் கல்வியாளர் பொன். முகைதீன் பிச்சை, பிரபு முகைதீன், தகவல் தொடர்பு பிரிவில் பணியாற்றி வரும் திருச்சி இக்பால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...