Pages

Thursday, April 14, 2016

தஞ்சாவூர் மாவட்ட திமுக வேட்பாளர்கள் முழு விவரங்கள் !

திருவையாறு தொகுதி திமுக வேட்பாளர்
பெயர் : துரை. சந்திரசேகரன்
வயது : 57
கல்வித் தகுதி : பி.ஏ., எல்.எல்.பி.
தொழில் : விவசாயம்.
முகவரி : கண்டியூர், திருவையாறு         வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
குடும்பம் : மனைவி கண்மணி, மகன் சுஜன், மகள் சுரேகா.
பதவிகள் : 1989 - 91, 1996 - 01, 2006 - 11 ஆம் ஆண்டுகளில் திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்.
கட்சிப் பொறுப்பு: 1992 ஆம் ஆண்டு முதல் திமுக திருவையாறு ஒன்றியச் செயலர், 2015 ஆம் ஆண்டு முதல் திமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலர்.

ஒரத்தநாடு தொகுதி திமுக வேட்பாளர்
பெயர் : எஸ்.எஸ். ராஜ்குமார்
வயது : 56
கல்வித் தகுதி : பி.காம்., பி.எல்.
தொழில் : வழக்குரைஞர்
குடும்பம் : மூத்த சகோதரர் முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், வேட்பாளரின் மனைவி சர்மிளா, மகன் ஸ்ரீராம், மகள் ஐஸ்வர்யா.
முகவரி : பிரதாபசிம்மபுரம், சீனிவாசபுரம், தஞ்சாவூர்.
கட்சிப் பொறுப்பு: கழக உறுப்பினர்.

தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர்
பெயர் : டாக்டர் அஞ்சுகம் பூபதி
வயது : 29
கல்வித் தகுதி : எம்.பி.பி.எஸ்., எம்.டி.
தொழில் : மகப்பேறு மருத்துவர்

குடும்பம் : தந்தை முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் பூபதி (மறைவு), தாய் கல்வித் துறையின் ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் ரூபாவதி, தம்பி பொறியாளர் ராஜராஜன்.
முகவரி : குறிஞ்சி தெரு, புதிய வீட்டு வசதி
வாரியக் குடியிருப்பு.
கட்சிப் பொறுப்பு: திமுக மருத்துவர் அணி தெற்கு மாவட்ட அமைப்பாளர்.

குடந்தை தொகுதி  திமுக வேட்பாளர்
பெயர் : க. அன்பழகன்
தந்தை பெயர் : கே. கணபதி
தாயார் பெயர் : ஏகாம்பாள்
மனைவி பெயர் : இன்னமுது
கல்வித்தகுதி : எஸ்.எஸ்.எல்.சி.
பிறந்த தேதி : 24-12-1949

1. கும்பகோணம் எம்எல்ஏ (2011-2016)
2. நிறுவனர், குடந்தை அன்பு மருத்துவமனை,
3. தலைவர்,குடந்தை தமிழ்ச் சங்கம்
4. திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்

வகித்த பதவிகள்
1. கும்பகோணம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் (1996-2006)
2. மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் (2006-2011)
3. தலைவர், கும்பகோணம் பரஸ்பர சகாயநிதி லிட் (2006-2011)

திருவிடைமருதூர் தொகுதி திமுக வேட்பாளர்
பெயர் : கோவி.செழியன் படம்
தந்தை பெயர் : கோவிந்தன்.
தாயார் பெயர் : பட்டு
பிறந்த தேதி : 13.6.1966.
மனைவி : உமாதேவி,
மகள் : அபிநயா,
மகன் : சபரிசெல்வன்
முகவரி : கும்பகோணம் அருகே     உள்ள சோழபுரம் ராஜாங்க நல்லூர் கீழத்தெரு
படிப்பு : கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பி.எல். அண்ணாமலை பல்கலைகக்கழகத்தில் எம்.ஏ. தமிழ், எம்.ஏ. சமூகவியல், எம்.பி.எல். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. பட்டம்.

திமுக தலைமைக் கழகப் பேச்சாளராக, மாணவரணி இணைத் செயலராக, சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும் உள்ளார். கடந்த முறை திருவிடைமருதூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பேராவூரணி தொகுதி திமுக வேட்பாளர்
பெயர் : என். அசோக்குமார்.
பிறந்த தேதி : 15.4.1957
தந்தை பெயர் : நாராயணசாமி தேவர்
தாய் : ஜெயம்
மனைவி : பரிமளா
மகன்கள்: கார்க்கி, கீர்த்தி
கல்வித் தகுதி : பட்டதாரி
பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை கிராமத்தை சேர்ந்த இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேராவூரணி நகரில் வசிக்கிறார். இவர் தொடர்ந்து 2-வது முறையாக பேராவூரணி பேரூராட்சித் தலைவராக பதவி வகிக்கிறார். திமுகவை சேரந்த முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தியின் மருமகனாவார்.

நன்றி: தினமணி

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...