Pages

Friday, April 8, 2016

ம.ம.க போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு !

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இணைந்துள்ளது. இதில் அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இரு கட்சிகளின் தொகுதி உடன்பாடு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் மனித நேய மக்கள் கட்சி இராமநாதபுரம், ஆம்பூர், நாகப்பட்டினம், தொண்டாமுத்தூர், உளுந்தூர்பேட்டை ஆகிய தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது.

ராமநாதபுரம், ஆம்பூர் ஆகிய தொகுதிகள் மனித நேய மக்கள் கட்சி வசம் உள்ளன.

4 comments:

  1. நாகப்பட்டினத்தில் தமீமன்சாரி போட்டியிடுவதாக அறிவித்துள்ளது, பழி வாங்கும் செயல்!

    ReplyDelete
  2. மமக,தமுமுக நண்பர்கள் பதில் தருவார்கள்
    என்ற நம்பிக்கையில் கேட்கிறேன்.

    1) நாகையில் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

    2)கடந்தமுறை மயிலாடுதுறை தொகுதியில் வீடுவீடாக சென்று முஸ்லீம் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று கேட்டீர்களே இப்போது யாரை முஸ்லீம்வேட்பாளராக அங்கீகரிப்பது?
    உங்களையா அல்லது தமீமுல்அன்சாரியையா?

    3)தமீமுல்அன்சாரிக்கு ஏற்கனவே நாகை தொகுதி ஒதுக்கபட்டது அறிந்தும் வேண்டுமென்றே அதே தொகுதியை கேட்டு பெற்றிருப்பதன் நோக்கம் என்ன?

    4)உங்கள் சொந்தபிரச்சனைகளுக்காக ஒரு முஸ்லீம் வேட்பாளரின் வெற்றி வாய்ப்பை கெடுக்கிறீர்கள் என்று ததஜவை குற்றபடுத்திய நீங்கள் இன்று செய்யும் காரியம் மட்டும் ஏற்புடையதா?

    5)இனி சமுதாயநலன் பற்றி பேச உங்களுக்கு தகுதியுள்ளதா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...