Pages

Wednesday, April 13, 2016

வங்கி கணக்கில் நூதன முறையில் பண மோசடி !

அதிராம்பட்டினம், ஏப்-13,
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மத்திய வங்கி கிளை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் ரூ. 23 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள சேண்டாக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். டைலர் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ராணி ( வயது 35 ). அதிரையில் இயங்கும் அரசுடமையாக்கப்பட்ட மத்திய வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவரது வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் ரூ. 23 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ராணி நம்மிடம் கூறுகையில்...
நேற்று 12 ந்தேதி செவ்வாய்கிழமை மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு, தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் தலைமையகத்தின் மேலாளர் பேசுவதாக என்னிடம் கூறினார். உங்களது ஏடிஎம் கார்டை புதுப்பித்து வழங்க இருக்கிறோம். எனது ஏடிஎம் அட்டையின் பின் நம்பரை கேட்டார். இதனை உண்மை என நம்பிய நான் ஏடிஎம் அட்டையின் எண்ணைத் தெரிவித்தேன். சற்று நேரத்தில் எனது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது.

இதில் எனது கணக்கிலிருந்து அடுத்தடுத்து பணம் பறிபோனது. மொத்தம் ரூ. 23 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ள தகவல் வந்தது. அதிர்ச்சியடைந்த நான் நேராக சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்குச் சென்று விவரம் கேட்டதற்கு, அதுபோன்று வங்கியில் இருந்து யாரும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை என விளக்கம் அளித்தனர். மேலும் இது போன்ற அழைப்புகளைத் தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தினர்' என்றார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஹாஜி முஹம்மது பாருக் அவர்கள் நம்மிடம் கூறுகையில்...
'இதுபோன்ற நூதன முறையில் பண மோசடி செய்யும் சம்பவம் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடக்கிறது. அதிரை சுற்று வட்டார பொதுமக்கள் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் இதுபோன்ற மோசடி அழைப்புகளை தவிர்த்துக்கொள்ளவும். தொடர்ந்து அழைப்பு வரும் பட்சத்தில் அருகில் உள்ள காவல்துறையின் உதவியை நாடலாம். அல்லது ஏடிஎம் அட்டையின் பின்புறமுள்ள அவசர அழைப்பு எண்ணை தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

செல்போனில் தொடர்பு கொள்ளும் அறிமுக மில்லாத நபர்களிடம் நம்மை பற்றிய விவரங்கள் அல்லது வங்கி கணக்கு குறித்த தகவல்கள் தெரிவிக்க வேண்டாம். இவை ஆபத்தை விளைவிக்கும். இதுபோன்ற நூதன மோசடிகளில் வாடிக்கையாளர்கள் ஏமாறுவதை தவிர்க்கும் பொருட்டு வங்கிகளின் சார்பில் அனைத்து பகுதிகளிலும் ஆட்டோ ஒலிப்பெருக்கி அறிவிப்பு செய்ய வேண்டும். மேலும் பொதுமக்கள் பார்வையில் படும்படி சம்பந்தபட்ட வங்கிகளின் முன்புற பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்பு தட்டி வைக்க வேண்டும்.' என்றார்.

2 comments:

 1. பதிவுக்கு நன்றி.
  மக்களுக்கு, விழிப்புணர்வு இல்லாத வரைக்கும் இது மாதிரி மோசடிகள் தொடரும்.

  K.M.A. Jamal Mohamed.
  President – PKT Taluk.
  National Consumer Protection Service Centre.
  State Executive Member of TN
  Adirampattinam-614701.

  ReplyDelete
 2. இது ஒன்றும் நூதன திருட்டு அல்ல ஏற்கனவே இருந்துக்கொண்டு தான் இருக்கு. அக்கறை இல்லாத வங்கியை தான் குறை சொல்ல வேண்டும். வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு (OTP on time password ) SMS தகவல் கொடுத்து பின்னேர பண பரிமாற்றம் செய்ய வேண்டும். வங்கிகாரர்களுக்கு இதனைப் பற்றி தெரிந்தாலும் அதனை நடைமுறைப் படுத்த ஏன் இவ்வளவு அவகாசம். யாரு திருடினா என்பது வங்கிகாரனுக்கு தெரிந்து விடும் அப்பாவி வாடிக்கையாளர்களே.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...