Pages

Tuesday, April 12, 2016

வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் அதிரை IRCS பங்கேற்பு !

அதிராம்பட்டினம் ஏப்-12
நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுதேர்தல் 2016 ஐ முன்னிட்டு. தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 100% நேர்மையாக வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்ட மன்றத் தொகுதிகளையும் இணைக்கும் வகையில் அணைக்கரை முதல் கடற்கரை வரை மற்றும் கல்லணை முதல் தஞ்சாவூர் வரையிலும் வாக்காளர் மனித சங்கிலி. வாக்காளர் விழிப்புணர்வு நடைபயணம் 100% நேர்மையாக வாக்களிக்க உறுதிமொழி ஏற்பு போன்ற தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்த மாவட்ட தேர்தல் அலுலவர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் அறிவுறுத்தி இருந்தார்.

அதன் படி இன்று காலை பட்டுக்கோட்டை தாலுகா பகுதிக்கு உட்பட்ட கரம்பயம் முதல் கார்கவயல் வரையிலான பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ராஜசேகர் தலைமையேற்று தொடங்கி வைத்தார். இதில்
பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை தாசில்தார் குருமூர்த்தி, பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர், கே. அச்சையா, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை கிளை தலைவர் மரைக்கா இத்ரீஸ் அஹமது மற்றும் ரெட் கிராஸ் உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

1 comment:

  1. மாங்கு மாங்குன்னு ஓட்டுப்போட்டாலும் சரி அதோடு கள்ள ஓட்டுப்போட்டாலும் சரி சராசரி விகிதத்தில் ஏற்றம் இல்லை என்பது தேர்தல் ஆணையத்தின் குற்றச்சாட்டு எப்படியெல்லாம் மக்களை கவர்ந்து 100 சதவிகிதம் ஓட்டுப் போட வேண்டும் என்று லகானி முயற்சிக்கிறார் " ஆமா! ஓட்டுப் போட்டு என்னத்த கண்டோம் " என்று ஒதுங்குபவர்களையும் கவரும் வகையில் பல நடவடிக்கை எடுக்கப்படுவதை நாம் காண்கிறோம் அந்த வகையில் அணைக்கரை முதல் அதிரை கடற்கரை வரை ஒரு தேர்தல் சிறப்பு குழுக்கள் நடத்த வேண்டும் ஓட்டுப்போடும் 100 பொது மக்களுக்கு சிறப்பு பரிசாக தங்க நாணயம் 50 பேருக்கு சுசுகி காரு 25 பேருக்கு தலா 1 லட்சம் ரொக்கப் பரிசு ஓட்டுப் போடும் முதியவர்களுக்கு ஆறுதலாக 1 மாத இலவச பயண சீட்டு இப்படி அள்ளி விட்டாலே போதும் வாக்கு சதவிகிதம் எகிறிவிடும். பேனர் வைத்து நின்றால் பரிதாப்பட்டு யாரும் வாக்குப் போடமாட்டாங்க.
    எனது வாக்கு விலை அதிஷ்டத்தில் என்று மாற்றி பரப்புரை செய்யுங்கள்.... கள்ள ஒட்டு கண்ட்ரோல் பண்ண கேமிரா முக்கியம் ... ராஜேஷ் லகானி அவர்கள் என்கோரிக்கையை பரிசிளிக்கவும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...