Pages

Thursday, May 5, 2016

அதிரையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் 10 அம்ச கோரிக்கை வைப்பு !

அதிராம்பட்டினம் மே-05
சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி அங்கம் வகிக்கிறது. கூட்டணி கட்சி சார்பில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மகேந்திரன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அதிரை பேரூர் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்குகொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று இரவு 7 மணியளவில் தமுமுக-மமக கட்சி அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு மமக அதிரை பேரூர் செயலாளர் ஹாலித் தலைமை வகித்தார். தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா, திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம குணசேகரன், காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் தலைவர் முஹம்மது முகைதீன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், தமுமுக அதிரை பேரூர் செயலாளர் ஏஆர் சாதிக்பாட்சா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்து பேசினார்கள்.

இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மகேந்திரன் அவர்களின் வெற்றிக்காக பாடுபடுவது, அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வேட்பாளர் மகேந்திரனுக்கு ஆதரவாக வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பது உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டன.

மேலும் கூட்டத்தில் அதிரை பேரூர் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அதிரை அரசு மருத்துவமனை முழு நேர சேவை, தீயணைப்பு நிலையம் அமைத்தல், அதிரை - மதுக்கூர் - மன்னார்குடி அரசு பேருந்து போக்குவரத்து வசதி, துணை மின் நிலையம் அமைத்தல், பாதாள சாக்கடை திட்டம், கடற்கரைத்தெருவில் நீர்தேக்க தொட்டி அமைத்தல், வடிகால் வாய்க்கால் தூர் வாருதல், அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துதல், பயனியர் மாளிகையை விரைந்து கட்டிமுடித்தல் உள்ளிட்ட அதிரை பொதுநலன் சார்ந்த 10 அம்ச கோரிக்கை வைக்கப்பட்டது.

முன்னதாக அதிரை பேரூர் மமக பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி வரவேற்று பேசினார். கூட்ட முடிவில் மமக துணைச் செயலாளர் இத்ரீஸ் அஹமது நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் தமுமுக, மமக நிர்வாகிகள் - உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...