Pages

Thursday, May 5, 2016

அதிரை பைத்துல்மால் சார்பில் நலிவடைந்த பெண்களுக்கு 6 தையல்மிஷின்கள் வாழ்வாதார உதவி !

அதிராம்பட்டினம் மே-5
அதிரை பைத்துல்மால் சார்பில் நலிவடைந்த பெண்களுக்கு வாழ்வாதார உதவியாக தையல்மிஷின்கள் வழங்க முடிவு செய்யபட்டது. இதையடுத்து அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை சார்பில் 4 தையல் மிஷன்கள், குவைத் வாழ் அதிரையர் ஜைனுல் ஹுசைன் சார்பில் 2 தையல் மிஷின்களுக்கான நிதி உதவியை வழங்கினர்.

பயனாளிகளுக்கு தையல்மிஷின்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் பர்கத் தலைமை வகித்தார். இதில் கடற்கரைத்தெரு, கீழத்தெரு, பிலால் நகர், வெற்றிலைக்காரத் தெரு, சுரைக்கா கொல்லை, ஹாஜா நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 6 நபர்களுக்கு தலா ஒரு தையல்மிஷின் வீதம் 6 தையல்மிஷின்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அதிரை பைத்துல்மால் செயலாளர் அப்துல் ஹமீது, துணைத்தலைவர் S.K.M.ஹாஜா முகைதீன், பொருளாளர் N.சிபஹத்துல்லா
துணை செயலாளர் A.S.அகமது ஜலீல், ஒருங்கிணைப்பாளர் S.M.முகமது முகைதீன், துணை தலைவர் A.முகமது முகைதீன், மஹல்லா பொறுப்பாளர்கள் S.M.A.செய்யது முகமது புஹாரி
A.அகமது ஹாஜா, M.சகாபுதீன், K.நிஜார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உதவியை பெற்றுக்கொண்ட பயனாளிகள் அதிரை பைத்துல்மாலுக்கும், நிதி உதவி அளித்த நல்லுல்லங்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...