Pages

Tuesday, May 3, 2016

8 சட்ட மன்றத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு !

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மாவட்டத்திலுள்ள 8 சட்ட மன்றத் தொகுதிகளுக்கும் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:
நேற்று 2.05.2016 அன்று தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் முன்னணியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் செய்யப்பட்டது.

இன்று தஞ்சாவ10ர் மாவட்டத்திலுள்ள சட்ட மன்றத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகிறது.  மாவட்டத்திலுள்ள 2175 வாக்குச் சாவடிகளுக்கு 2501 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. பயிற்சிக்காக 20 இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவில் இயந்திரத்தில் வாக்காளர்களின் பெயர் பட்டியல், சின்னம் விரைவில் பதியப்படவுள்ளது அல்லது முகவர்கள் முன்னிலையில் வாக்காளர்களின் பெயர் பட்டியல், சின்னம் விரைவில் பதியப்படுவதை நேரில் பார்வையிடலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.சுரேஷ் மற்றும் அலுவலர்கள்  உடனிருந்தனர்.

1 comment:

  1. 8 சட்ட மன்றத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைத்தது போல் ஆம்புலன்சில் எடுத்து சென்று பதுக்கிய பணத்தை அதிகாரிகளே பட்டுவாடா பண்ணினாலும் பண்ணுவார்கள். பணத்தேர்தல் நேரத்தில் அறுவடை செய்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...