Pages

Monday, May 9, 2016

அதிராம்பட்டினத்தில் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும்: மு.க. ஸ்டாலின் பேச்சு !

பட்டுக்கோட்டை, மே-9
பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் வேட்பாளர்  கே. மகேந்திரனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பேசியது:

தமிழகத்தில் நாட்டைப் பற்றி, மக்களைப் பற்றி சிந்திக்காத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் லஞ்ச, ஊழல்தான் பெருகியுள்ளது. மக்களை சந்திக்காத முதலமைச்சர் ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில் செய்ய முடியாததை எல்லாம் செய்து தருவேன் என்று கூறுகிறார்.

இந்த தொகுதியின் எம்பி நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவை புகழ்ந்து பஜனை பாடிக் கொண்டிருக்கிறார். கிடப்பில் போடப்பட்டுள்ள காரைக்குடி-திருவாரூர் அகல ரயில்பாதை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அவர் எதுவும் பேசவில்லை. பட்டுக்கோட்டை நகரில் திமுக அரசால் கொண்டு வரப்பட்ட புறவழிச்சாலை, ரூ. 8 கோடியில் அமைக்கப்பட்ட தென்னை வணிக வளாகம் ஆகியவை அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்டன.

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும் முடக்கப்பட்ட திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேவையான இடங்களில் விளைபொருள்களை இருப்பு வைக்க குளிர் பதனக் கிடங்கு கட்டப்படும். கரும்பு, நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்கும்.  கொப்பரை தேங்காயை அரசே கொள்முதல் செய்யும். தேங்காய் எண்ணெய், நாட்டுச்சக்கரை ஆகியவை ரேசன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும். கடலோரப் பகுதிகளில் இறால் பண்ணை தொழில் விரிவாக்க மையம் தொடங்கப்படும். கடைமடைப் பகுதியிலுள்ள அனைத்து ஆறு, ஏரி, குளம், வாய்க்கால் ஆகியவற்றை தூர் வாரி, காட்டாறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி பாசன வசதி மேம்படுத்தப்படும்.

அதிராம்பட்டினத்தில் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும். மதுக்கூர் கண்ணனாற்றில் மேம்பாலம், வெண்டாக்கோட்டை அணையில் பம்பிங் ஸ்டேஷன் கட்டப்படும். பட்டுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம், கடல்சார் கல்லூரி ஆகியவை அமைக்கப்படும் என்றார் மு.க. ஸ்டாலின்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...