Pages

Saturday, May 7, 2016

அதிரை நியூஸின் முக்கிய அறிவிப்பு !

அன்பான அதிரை நியூஸ் வலைதளத்தின் பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் கருத்திடுபவர்களுக்கும் அதிரை நியூஸ் நிர்வாகத்தின் அன்பான வேண்டுகோளுடன் கூடிய அறிவிப்பு.

அதிரை நியூஸ் வலைத்தளத்தின் நோக்கம் அதிரை மற்றும் அதன் வட்டாரப்பகுதிகளில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை சாதி மத இன பேதமின்றி வெளியிட்டு அதிரையின் அனைத்து மக்களின் கவனத்துக்கும் சென்று சேர்க்க வேண்டுமென்பதே.

அவ்வகையில்தான் எவ்வித தவறும் நிகழ்ந்துவிடாதவகையில் இந்த வலைத்தளம் தொடங்கிய காலம் முதல் சுத்தமான மனதுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

அதே முறையில்தான் கருத்துச் சுதந்திரங்களுக்கு எவ்வித தடையும் போடாமல் அனைவரின் கருத்தையும் தடை இல்லாமல் பிரசுரித்தும் வருகிறோம்.

கடந்த சில நாட்களாக அதிரை நியூஸ் இணையதளம் மற்றும் முகநூலில் நாம் பதியப்படும் சில செய்திகளின் பின்னூட்டங்களில் தனி நபர் விமர்சனங்களும், நாகரிகற்ற வார்த்தைகளால் மற்றவர்களைப் புண்படுத்துவது போன்ற அம்சங்களும் அமைந்து இருப்பதை நாம் வருத்தத்துடன் உணர முடிகிறது. பின்னூட்டங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நம்மை தொடர்புகொண்டு வருத்தத்தை தெரியப்படுத்தி வருகின்றனர்.

அதிரை நியூஸ் தனது கண்ணியத்தை கட்டிக் காக்க நினைக்கிறது. இந்த மண்ணில் சகோதரத்துவமும் சமத்துவமும் தழைத்து வளர்ந்திருக்கிறது. அண்மைக்கால அரசியல் நடவடிக்கைகளால் சமுதாயத்தின் பிரிவினர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால்  தாக்கிக் கொள்வதற்கு அதிரை நியூசை ஒரு களமாகப் பயன்படுத்துவதை நிர்வாகம் அனுமதிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

எவராக இருந்தாலும் தங்களின் கருத்தை பண்புடனும் கண்ணியத்துடன் பதிய நினைத்தால் அவர்களை அதிரை நியூஸ் ஊக்கப்படுத்தி வரவேற்கும் என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறோம்.

என்றும் உங்களின் அன்பான சேவையில்,

அதிரை நியூஸ்

4 comments:

  1. பதிவுகளை இடுவதற்கு முன், நன்கு சிந்தித்து, சர்ச்சைகள், மோதல்கள், பின்னூட்டத் தாக்குதல்கள் வருமா என்பதை எச்சரிக்கைக் கருவியாக எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரை செய்கின்றேன்.

    ReplyDelete
  2. சில குறுக்கல் வருவது இயற்கை. ஆனால் அது பிழை அல்ல.

    ReplyDelete
  3. அதிரை நியூஸ் வலைத்தளத்தின் நோக்கம் அதிரை மற்றும் அதன் வட்டாரப்பகுதிகளில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை சாதி மத இன பேதமின்றி வெளியிட்டு அதிரையின் அனைத்து மக்களின் கவனத்துக்கும் சென்று சேர்க்க வேண்டுமென்பதே.

    உங்களின் இந்த கருத்தில் சிறு மாற்றம்.

    சமீப காலமாக உங்கள் வலைத்தளத்தில் அன்றாட நிகழ்வுகள் அனைத்தும் நீங்கள் மக்களிடம் கொண்டுசெல்லவில்லை குறிப்பிட்ட சிலரை பற்றிய பதிவுகள் மற்றும் உங்களுக்கு ஆதயம் உள்ள பதிவுகள் மட்டும் பதிவிடுகிறீரகள்
    இதனை சற்று மாற்றிக்கொண்டு அனைத்து நிகழ்வுகளையும் நடுநிலையுடன் பதிவிட்டு உங்கள் வலைதளத்தின் மேல் உள்ள நம்பகதன்மையை பாதுகாத்துக்கொள்ளவும்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...