Pages

Tuesday, May 24, 2016

அதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது அறிவிப்பு !

அதிரை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 10,000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நமதூர் அரசு பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் 1 ம் ஆம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.

கல்வியில் பின்தங்கிய நமது பகுதி மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் மற்றும் தேர்ச்சி விகிதத்தை மேம்படுத்தும் நோக்கில் கடந்த வருடம் அதிரை நியூஸ் கல்வி விருது மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது.

கடந்த வருடம் அனைத்து தரப்பினரின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுத் தந்த விருது வழங்கும் விழாவை 2 ஆம் ஆண்டாக இந்த வருடமும் நடத்துவதற்கு அதிரை நியூஸ் குழு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் படி, நமதூர் பகுதி பள்ளிகளில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள / பெற இருக்கிற மாணவ மாணவிகள், நமதூர் கல்வி நிறுவனங்களை சேர்ந்த கல்விச்சேவையில் சிறந்த சாதனை படைத்துள்ள ஆசிரியை ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியோருக்கு 'அதிரை நியூஸ் கல்வி விருதுகள்-2016' விழா நடைபெறும். இதில் அரசு அலுவலர்கள் - கல்வியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பரிசுகள் - பதக்கங்கள் - பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்த உள்ளனர்.

மேலும் நமது பகுதியில் உள்ள பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்திய சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு, இவர்களின் சிறந்த சேவைகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் சிறப்பு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட உள்ளது.

தகுதியான சாதனையாளர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அதிரை நியூஸ் சார்பில் கல்வியாளர்கள் - சமூக ஆர்வலர்கள் ஆகியோர் அடங்கிய 'விருது கமிட்டியினர்' வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சாதனையாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகளில் இவர்கள் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விருது பெற இருக்கும் சாதனையாளர்கள், விருது நடைபெறும் நாள் - இடம், விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள இருக்கும் சிறப்பு விருந்தினர்கள் - ஸ்பான்சர்கள் உள்ளிட்ட இதர விவரங்கள் விரைவில் அறிவிப்பு செய்யப்படும்.

மேலும் இதுதொடர்பாக கல்வியாளர்கள் - சமூக ஆர்வலர்கள், வாசகர்கள் ஆகியோரிடமிருந்து சிறந்த ஆலோசனைகள் - கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

editoradirainews@gmail.com

அதிரை நியூஸ் குழு

11 comments:

 1. எல்லாம் வல்ல இறைவனின் கருணையாலும், ஷைத்தானின் தடை ஏதும் இல்லாமலும்.

  சான்றோர்கள், அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், பெரியோர்கள், நண்பர்கள், இன்னும் பலர் வந்து சிறக்க, சிறப்பாய் அரங்கேறிட, நன்முகம் கொண்டு இன்பத்தால் பொங்கி மகிழ்ந்திட, ஒருவருக்கொருவர் சகோதரத்துவம் மேலோங்கிட.

  இந்த விழா பொங்கிவரும் பூம்புனல் போல் இன்பத்தால் துள்ளி அரங்கேறிட என்னுடைய வாழ்த்துக்களை அள்ளி அள்ளி வீசுகின்றேன்.

  ReplyDelete
 2. யாரும் இதுவரை செய்ப்யா விருது
  அதிரைநியுஸ்க்கு நன்றி.

  ReplyDelete
 3. யாரும் இதுவரை செய்ப்யா விருது
  அதிரைநியுஸ்க்கு நன்றி.

  ReplyDelete
 4. விருது ஒரு விருந்து !

  ReplyDelete
 5. Plz program arrange on Sunday

  ReplyDelete
 6. Plz program arrange on Sunday

  ReplyDelete
 7. என்காக்கா
  எதுசொன்னாலும் OK தான்
  விருது....விருந்து

  ReplyDelete
 8. ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து இத்தகைய விழா நடத்தி திறமையாளர்களை உலகறியச்செய்து ஊக்கப்படுத்தும் உங்களது சேவை பாராட்டிற்குரியது. தொடர்ந்து தொய்வின்றி சிறப்புடன் இந்த விழா நடந்திட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. இந்த சாதனைக்கு அதிரை நியூஸ்ஸுக்கும் ஒரு விருது கொடுக்கலாம்.

  ReplyDelete
 10. அதிரை நியூஸ் தளத்தில் தொடர்ந்து கருத்து பதிவு செய்வதால் மனதிலுள்ள சில துளிகள்.

  1) சென்றாண்டில் கொடுத்த விருது விழா தொகுப்புகள் இன்னமும் அதே இடத்தில் உள்ளது இது " அரசு பயணமாக இந்திரா காந்தி வெளிநாட்டு பயணம்" என்று முட்டாள்தனமாக பழைய நியூஸ் பேப்பரை வாசிப்பதுப் போல் உள்ளது : தேவை வலைத்தளம் மேம்படுத்தணும்

  2) கந்தூரிக்கு எதிராக மனுகொடுப்பவர்களை தான் போடோவுடன் செய்தி வெளியாகிறது அதனை தொடர்ந்து வரும் விழா சம்பந்தமாக எதையும் இதில் இடம்பெறவில்லை ஆனால் அத்தனையும் FB page ., Whatsup போன்றவற்றில் காணமுடிகிறதென்றால் " உள்ளூர் நிகழ்வுகள் உடக்குடன்" என்று சொல்லுவதில் அர்த்தம் இருக்கா?

  3) விருது வாங்க வருபவர்களால் விழா பூக்கோலம் காணலாம் அதேநேரத்தில் இத்தளத்தில் வருபவர்களா என்றால் சந்தேகமே., செய்திகள் அடிக்கடி அப்டேட் பண்ணனும் 24 * 7 இல்லாவிட்டாலும் பரவாயில்லை குறைந்தது 2...3.. அப்டேட் இருந்தால் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

  4) வபாத்தான செய்திகளுக்கு மட்டும் " இன்னலில்லாஹி ..." பதிவு மட்டும் இருக்கும் மற்றவைகளுக்கு கடினமே., மற்ற செய்திகளுக்கு வாசகர்ளின் விமர்சனம் இருந்தால் இத்தளம் மேலும் மெருகூட்டும் என்பதில் சந்தேகமில்லை அதற்க்கு " LIKE Option தேவை.

  5) கருத்து பதிவு செய்துவிட்டு பிறகு நீக்குவதை விட முன்பே அதனை சரிபாத்துவிட்டு புப்ளிஷ் பண்ணலாம்., தினமலரில் என்னுடைய பழைய பதிவை எடுத்து பார்க்கும் வசதிஉண்டு அதனைப்போல் இருந்தால் வாசகர்களின் பதிவு அதிகரிக்கும்.

  6)நாடு விட்டு நாடு மாநில விட்டு மாநிலச் செய்திகள் இதில் இடம்பெரும்பொழுது உள்ளூரில் சில நிகழ்வுகள் இடம்பெறுவதில்லை ; வருத்தமாகத் தான் உள்ளது.

  7) அரசியல., அமைப்புகள். பொது செய்திகள் இடம்பெறும் பொழுது செய்திகள் முழுமையடைவதில்லை. நிகழ்ச்சியில் கலந்துக்கொள்பவர்களின் பெயர்கள் மட்டும் குறுப்பிடபடுகிறது; அதில் எடுத்த தீர்மானம்/ என்ன பேசினார்/ என்னவென்று விபரம் இல்லை.

  8) சமீபத்தில் நடந்த தேர்தலில் வாக்களித்தவர்களின் புகைப்படம் காணவில்லை சென்ற தேர்தலில் போட்ட போட்டோவை
  தான் காணமுடிந்தது., ??

  9) தஞ்சை கலக்டர் செய்திகள் தான் பிரதானமாக இடம்பெறுது ..தில்லு முள்ளு செய்யும் அதிகாரிகளின் செய்தி இடம்பெறுவதில்லை;

  10) கல்விக்கான விருது கொடுப்பதை விட தேர்வில் வெற்றி பெற நிகழ்ச்சி நடத்தலாம் அதுவே அவர்களின் வாழ்க்கை வழிகாட்டியாக அமையும்.

  குறையாக கருதாமல் தளத்தை தேவையான modification பண்ணனும் என்பது தான் பணிவான வேண்டுகோள்.

  ReplyDelete
 11. தொய்வின்றி தொடரும் ஊக்கப்படுத்தும் நிகழ்வு. பாராட்டுகிறேன்.

  அதே நேரம் ஆக்கபூர்வமாக தம்பி மஸ்தான் கனி அவர்கள் தெரிவித்து இருக்கும் சில யோசனைகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்த விரும்புகிறேன்.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...