Pages

Saturday, May 7, 2016

பிலால் நகரில் உலகத் தரத்தில் பேவர் பிளாக் சாலை !

அதிராம்பட்டினம் மே-07
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிபுறக்கரை ஊராட்சி பிலால் நகர் பகுதியில் உலகத்தரத்தில் ரூ 4 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினத்தை ஒட்டிய பகுதி பிலால் நகர். வருடம்தோறும் பெய்யும் மழையால் இந்த பகுதி கடும் சேதமடையும். கடந்த வருடம் பெய்த பலத்த மழையால் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்த பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள். அப்போது பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ அவர்கள் வெள்ளம் பாதித்த பிலால் நகர் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வெள்ளம் பாதித்த பகுதியில் தரமான சாலை வசதி ஏற்படுத்தி தருவதாக பொதுமக்களிடம் கூறிச்சென்றார். அதன் படி பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மேம்பாடு நிதி ரூ 4 லட்சம் மதிப்பீட்டில் 90 மீட்டர் நீளத்தில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

உலகத்தரத்தில் ஏரிபுறக்கரை ஊராட்சி பகுதியில் முதன் முதலாக பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பார்வையிடுகின்றனர். தாழ்வான பகுதியில் புதிய சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்த பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்களுக்கு  பிலால் நகர் பகுதி பொதுமக்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
 
 
 
 

1 comment:

  1. ரூ 4 லட்சம் மதிப்பீட்டில் மக்கள் பணம் தான மீதி இடங்கள் எப்போழுது

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...