Pages

Tuesday, May 3, 2016

'கெமிக்கல்’ கலந்த மைதாவுக்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி

வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட மைதாவை தமிழகத்தில் தடை செய்யுமாறு உணவு பாதுகாப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மைதா மாவு தயாரிக்கும் போது அதன் மென்மை தன்மைக்காக வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இதனால் இன்சுலின் உற்பத்தி குறைகிறது. சர்க்கரை நோயை உருவாக்கும் இந்த வேதிப்பொருள் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் இதனை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவூல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வேதிப்பொருள் கலக்கப்பட்ட மைதாவை 3 மாதத்திற்குள் தடை செய்யுமாறு உணவு பாதுகாப்பு துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நன்றி:விகடன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...