Pages

Thursday, May 5, 2016

அதிரையில் வெள்ளரி பழம் விற்பனை ஜோர் !

அதிராம்பட்டினம் மே-05
அதிராம்பட்டினம் பகுதியில் வெள்ளரி பழங்கள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஏராளமானோர் குளிர்பான கடைகளை நோக்கி சென்றவண்ணம் உள்ளனர். இந்நிலையில் அதிராம்பட்டினம் பகுதியில் வெள்ளரி பழங்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வெள்ளரி பழங்கள் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுகிறது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து கடைத்தெரு தக்வா பள்ளி அருகே விற்பனை செய்யும் வெள்ளரி பழ வியாபாரி செல்வகுமார் கூறுகையில், 
இந்த வெயில் நேரத்தில் வெள்ளரி பழம் சாப்பிட்டால் சூடு தணியும். வெள்ளரி பழங்களை ஜூஸ் போட்டு குடித்தால் தாகம் தணியும். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள், அதிராம்பட்டினம் பகுதிக்கு வெள்ளரி பழம் விற்பனை செய்ய வந்துள்ளோம். இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். பெரிய வெள்ளரி பழம் ரூ.75க்கும், சிறிய வெள்ளரி பழம் ரூ.50க்கும் விற்பனை செய்கிறோம் என்றார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...