Pages

Wednesday, May 25, 2016

வீட்டில் TV இல்லாததால் SSLC தேர்வில் சாதனை நிகழ்த்திய இரட்டைச் சகோதரர்கள் !

தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இதில் அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் முஹம்மது சலீம் அவர்களின் மகன்கள் சுஹைல் அஹமது பள்ளியளவில் 481/500 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும், அதே போல் மற்றொரு மகன் முஹம்மத் சஹ்ல் 477/500 மதிப்பெண்கள் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். இருவரும் உடன் பிறந்த இரட்டை சகோதரர்கள்.

தனது மகன்கள் வெற்றி குறித்து 3 M நிறுவன உரிமையாளர் முஹம்மது சலீம் நம்மிடம் கூறுகையில்...
அல்ஹம்துலில்லாஹ் என மகன்கள் இமாம் ஷாபி பள்ளியில் பயின்று இந்த அளவுக்கு மார்க்குகள் பெற்று இருப்பதற்கு முதலில் வல்லா ரஹ்மானாகிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி, அடுத்து, பள்ளி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், மற்றும் உடன் பயின்ற அவர்களுடைய நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இங்கே ஒரு சில விஷயங்களை பெற்றோர்களுக்கு தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

என பிள்ளைகள் இந்த அளவுக்கு மார்க் பெற முக்கிய காரணங்களில் சில:
1.      தினசரி காலை தொழுகையை ஜமாத்துடன் நிறைவேற்றி, தொடர்ந்து மக்தப் மதரசா பாடங்களை படித்துவிட்டுதான், பள்ளி செல்ல ஆயத்தமாவார்கள்.

2.      என் பிள்ளைகளுக்கு இன்றுவரை மொபைல், வாகனம் வாங்கி கொடுக்கவில்லை. (அவர்களின் சீரழிவிற்கு இதுதான் முழு முதல் காரணம் என்பதை உணர்ந்ததால்)

3.      எங்கள் வீடுகளில் டிவி கிடையாது. அதனால் அவர்களுக்கு சினிமா, சீரியல் பற்றி தெரியாது. இதுவும் அவர்களின் ஒழுக்கம் கெடாமல் பாதுகாத்தது.

4.  குரான் வாசிப்பதை அதிக ஈடுபாட்டுடன் செயல்படுத்தி வருகின்றனர்.

5.      இரவு இஷா தொழுகை முடிந்தவுடன் வீடு வந்து சேர்ந்து விடுவார்கள்.

6.      நல்ல நண்பர்களுடன் மட்டும் தொடர்பு வைத்து இருந்தார்கள். அதை  நாங்களும் கண்காணித்து வந்தோம்.

7.      எல்லாவற்றிற்கும் மேலாக ஆசிரியப்பெருமக்களுக்கும், வயதில் மூத்தவர்களுக்கும் மரியாதை கொடுத்து நடந்து கொண்டார்கள்.

மேற்கண்ட காரணங்களால் எனது மகன்கள் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். என்றார்.
சுஹைல் அஹமது 481/500 மதிப்பெண்கள் 
   முஹம்மத் சஹ்ல் 477/500 மதிப்பெண்கள்

10 comments:

 1. Alhamthulillah in sha Allah will continue +2 Also

  ReplyDelete
 2. மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. Masha Allah........Congratulation

  ReplyDelete
 4. மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்..மேலும் தொடர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்..

  ReplyDelete
 5. Iraiva, Men melum ivarkaludaya arivai valarpanaka

  ReplyDelete
 6. Iraiva, Men melum ivarkaludaya arivai valarpanaka

  ReplyDelete
 7. Masha Allah... Congrats brother's

  ReplyDelete
 8. எப்படி பிள்ளைகள் வளர்க்க வேண்டும் என்பதை கிடைத்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்தி பலருக்கு சிந்தனையை தந்த நண்பர் முஹம்மது சலீம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  நல்ல எண்ணம். நல்ல சிந்தனை. வல்லவன் வழியில் வாழ்வதே இலட்சியம். நேர்மை, உண்மை, நியாயம் இவைகள் கலந்த குணம் உம்மிடம் இருக்க உந்தன் வளர்ப்பு அப்படித்தானே இருக்கும். மிகுந்த மகிழ்ச்சி. இனியும் உங்கள் வாழ்வில் உன்னதம் பெற வாழ்த்துக்கள், துவாவுடன்.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...