.

Pages

Thursday, June 30, 2016

மரண அறிவிப்பு [ அஹமது கபீர் அவர்கள்]

அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகனும், ஹாஜா அலாவுதீன், முஹம்மது சாலிஹ் ஆகியோரின் மைத்துனரும், அஹமது அலி, தமீம் அன்சாரி, மீரா முகைதீன், நெய்னாம்ஷா, சேக் ஆகியோரின் அப்பாவுமாகிய ( தாத்தா ) அஹமது கபீர் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை ( 01-07-2016 ) காலை 9 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அலட்சியப்படுத்தும் பொதுமக்கள் ஒரு சிலருக்கு நன்றி சொல்லும் இந்த பியூஸ் கேரியர்கள்.

அலட்சியப்படுத்தும் பொதுமக்கள் ஒரு சிலருக்கு நன்றி சொல்லும் இந்த பியூஸ் கேரியர்கள்.


சதா காலமும் மின்சாரத்தி கடத்தி சூடாகிப் போன எங்களை, தற்போது அதிரை மின்வாரிய அலுவலகத்தில் நிம்மதியாக ஓய்வெடுக்கச் செய்த ஒரு சில மக்களுக்கு நன்றிகள் பல.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
PRESIDENT of pkt Tk
State Executive Member
National Consumer Protection Service Centre.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com

இனி 5 ம் வகுப்பு வரை மட்டுமே ஆல் பாஸ் !

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய கல்வி கொள்கையை வகுத்துள்ளது. பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக அக்கொள்கையின் முக்கிய அம்சங்கள் இணையதளத்தில் வெளியானது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 8ம் வகுப்பு வரை இருந்த ஆல் பாஸ் திட்டம் தற்போது 5ம் வகுப்பு வரை மட்டுமே செயல்படுத்தப்படும். 8ம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சி பெறச் செய்வதால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தாங்கள் விரும்பினால், 5–ம் வகுப்பு வரை தாய் மொழி அல்லது பிராந்திய மொழியை பயிற்று மொழியாக கொண்டு, பாடங்களை கற்பிக்கலாம், இரண்டாவது மொழி ஆங்கிலமாகவும், மூன்றாவது மொழியை அரசே தெரிவு செய்யலாம்.

பள்ளி முதல் பல்கலைகழகங்கள் வரை சமஸ்கிருத மொழியை கற்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 6 சதவீதம், கல்வித் துறையில் முதலீடு செய்ய வேண்டும்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கல்விச் சேவையைத் தொடர்வதை ஊக்குவிக்க வேண்டும். அதுமட்டுமன்றி, இந்தியப் பல்கலைக்கழகங்கள், வெளிநாடுகளில் கல்வி நிறுவனங்கள் தொடங்குவதற்கும் அனுமதியளிக்கப்பட வேண்டும்.

அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும்கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்த பரிசீலிக்கப்படும்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை முன்னேற்றும் நோக்கத்தில், அரசு உதவி பெறும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களும், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீதம் ஏழை மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, June 29, 2016

பெரிய ஜும்மா பள்ளி இஃப்தார் நிகழ்ச்சியில் அனைத்து மஹல்லா நிர்வாகிகள் பங்கேற்பு !

அதிராம்பட்டினம், ஜூன் 29
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பெரிய ஜும்மாப் பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பின் பேரில் அதிராம்பட்டினம் அனைத்து மஹல்லாவை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

வருகை தந்த அனைவரையும் பெரிய ஜும்மா பள்ளி இஃப்தார் கமிட்டியினர் அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர். இன்றைய இஃப்தார் நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காதிர் முகைதீன் கல்லூரியில் இஃப்தார் நிகழ்ச்சி !

அதிராம்பட்டினம், ஜூன் 29,
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அதிராம்பட்டினம் அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பேராசிரியர் ஏ.ஜே முஹம்மது நெய்னா ஆலிம் கலந்துகொண்டு இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார். பின்னர் சிறப்பு துஆ ஓதினார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊர் பிரமுகர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியரோடு கல்லூரி முதல்வர், துணை முதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், கல்லூரி அலுவலக ஆய்வக பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பட்டுக்கோட்டையில் நடந்த தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு பேரணி !

பட்டுக்கோட்டை ஜூன் 29,
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று காலை தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நகராட்சி மற்றும் ஊராட்சி பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ சேகர் மற்றும் பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் ஜவகர்பாபு மற்றும் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரோஜா மலைஅய்யன்ஆகியோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். அப்போது மாணவர்கள் தாங்கள் அருந்தும் தண்ணீரின் தரம் ஆய்வு செய்யப்பட்டதா என்பதையும், தூய்மையான குடிநீரை மட்டுமே பயண்படுத்துவோம் என்றும் உறுதிக்கொள்ள வேண்டும் என கூறினர்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இந்த விழாவில் கலந்துகொண்ட நகராட்சி மற்றும் ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களை கொண்டு ஊராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு தலைமை தபால் நியைம் வரை பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை
 
 
 
 

'தினமணி' நாளிதழில் வெளிவந்த நம்ம ஊரு செய்திகள் !

அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நிகழும் அன்றாட செய்திகள் தற்போது பிரபல நாளிதழ்களில் ஒன்றாகிய 'தினமணி' பத்திரிகையில் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன.

தினமணி நாளிதழில் வெளிவந்து இருக்கும் நம்ம ஊரு செய்திகளில் சில...
 
 
 

மரண அறிவிப்பு [ ஹாஜிமா மகபூபா அவர்கள் ]

அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.கி அல்லாபிச்சை அவர்களின் மகளும், மர்ஹூம் நெ.மு ஜபருல்லாஹ் அவர்களின் மனைவியும், மர்ஹூம் மு.கி.அ முகைதீன் சாஹிப், மர்ஹூம் மு.கி.அ அபூபக்கர், மு.கி.அ அஹமது அலி ஆகியோரின் சகோதரியும், ஜாஹிர் உசேன், இஸ்மத் ஆகியோரின் தாயாரும்,  மர்ஹூம் நெ.மு.க  சரபுல் மக்காம் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா மகபூபா அவர்கள் இன்று காலை 11 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10.30 மணிக்கு தராவிஹ் தொழுகைக்கு பின் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Tuesday, June 28, 2016

உயர் அதிகாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பி சாதித்துக் காட்டிய அதிரையர் !

அதிராம்பட்டினம், ஜூன் 28
புனிதமிகு ரமலான் மாத நோன்பு தினங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க கோரி சமூக ஆர்வலர் கே.எம்.ஏ. ஜமால் முஹம்மது அவர்கள் அதிராம்பட்டினம் மின்சார வாரிய உதவி செயற்பொறியியாளர் திரு. பிரகாஷ் அவர்களை கடந்த 13-06-2016 அன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இதில் ரமழான் மாதம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கவும், மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏற்படும் மின்தடையை தவிர்க்கவும், அதிரை மின்சார வாரிய அலுவலகத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மின்சார வாரிய உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை கடிதங்கள் அனுப்பி இந்த மாதம் நடைபெறும் மின்தடையை தவிர்க்க கேட்டுக்கொண்டார். இவரது முழு முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. இந்த மாதம் ( ஜூன் ) நடைபெற இருந்த மின்சார பராமரிப்பு பணி அடுத்த ( ஜூலை ) மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய உயர் அதிகாரி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் கே.எம்.ஏ ஜமால் முஹம்மது நம்மிடம் கூறுகையில்...
இந்த மாதம் 29/06/2016-புதன் கிழமை வழக்கம்போல் அதிரை பகுதியில் தமிழக மின் வாரியத்தால் மாதாந்திர பராமரிப்புக்காக மின்சாரத்தை துண்டிக்க ஆயத்தோடு இருந்தது தமிழக மின்சார வாரியம்.

இந்த விஷயம் எங்களுக்கு 13/06/2016-திங்கள் அன்று நோன்பு காலங்களில் தடையில்லாத மின்சாரம் வேண்டும் என்ற கோரிக்கையை அதிரை மின்வாரிய துணை பொறியாளர் திரு பிரகாஷ் அவர்களை சந்தித்து கொடுத்த போது தெரிய வந்தது. உடனே, தமிழக மின்வாரிய உயர் அதிகாரிகளை அலைபேசியில் தொடர்பு கொண்டு, பின்பு அவர்களுக்கு கோரிக்கை கடிதங்களும் அனுப்பப்பட்டது.

அதன் அடிப்படையில், நமது கோரிக்கையை ஏற்று இம்மாதம் நாளை 29/06/2016-புதன் கிழமை நடக்க இருந்த மாதாந்திர மின் பராமரிப்பு அடுத்தமாதம் “ஜூலை” இறுதி வரை ஒத்திவைப்பட்டது.

நமது கோரிக்கையை ஏற்று உடன் நடவடிக்கை எடுத்த தமிழக மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு அதிரை மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

அதிரை பேரூராட்சி உள்ளிட்ட தஞ்சை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் தரப்பரிசோதனை மேற்கொள்ள முடிவு !

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 27–ந்தேதி முதல் அடுத்த மாதம் 3–ந்தேதி வரை தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் புகை வண்டி நிலைய வளாகத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

இப்பேரணி புகை வண்டி நிலையத்திலிருந்து புறப்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் முடிவுற்றது.  இதில் கல்லூரி மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன்அவர்கள் தெரிவித்ததாவது.

குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரம் இந்தியாவில் முதன் முறையாக தமிழகத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்படுகின்றது.  இந்த முகாம் தமிழகத்தில அனைத்து இடங்களிலும் ஒரு வார காலத்திற்கும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படவுள்ளது.  இம்முகாம் தஞ்சை மாவட்டத்தில் ஒரு வார காலத்திற்கு நடத்தப்படவுள்ளது.  பொது மக்களுக்கு குடிநீர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே முக்கிய நோக்கமாகும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் உருவாக்கப்பட்ட களப்பரிசோதனை பெட்டியின் மூலம் குடிநீரின் 12 தரக்கட்டுப்பாடுகளை பரிசோதனை செய்யலாம்.

ஓவ்வொரு களப்பரிசோதனை பெட்டி மூலம் 100 நீர் மாதிரிகளின் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளுக்கும் இக்களப் பரிசோதனை பெட்டி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.  அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளின் நீர் மாதிரிகளை சோதனை செய்ய கொடுக்கப்பட்டுள்ளன.

இப்பாதுகாப்பு வாரத்தின் நான்காவது நாள் முதல் முடியும் நாள் வரை ஊரக மற்றும் நகர்ப்புற அனைத்து குடிநீர் நீராதாரங்களிலும் தரப்பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இம்முகாமின் குழு தஞ்சை மாவட்டத்திலுள்ள மாநகராட்சி மற்றும் 2 நகராட்சிகளில் தலா 250 வீதம் 750 நீர் மாதிரிகளும், 22 பேரூராட்சிகளில் தலா 200 வீதம் 4400 நீர் மாதிரிகளும், 14 ஒன்றியங்களிலுள்ள 589 ஊராட்சிகளில் 18652 நீர் மாதிரிகளும் ஆக மொத்தம் 23802 நீர் மாதிரிகள், நீர் ஆதாரங்களிலும், மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலும் மற்றும் பொது குடிநீர் குழாய்களிலும் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும். குடிநீர் தரப்பரிசோதனைகளை இதற்கென பிரத்தியோகமாக பயிற்சி அளிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் நீh இறைப்பான் இயக்குபவர்களைக் கொண்டு நடத்தப்படும்.

இத்தரப்பரிசோதனைகளுக்காக தஞ்சாவ10ர் மாவட்டத்தில் 8642 பள்ளி ஆசிரியர்களுக்கு 1131 நீர் இறைப்பான் இயக்குபவர்களுக்கும் தகுந்த பயிற்சி அளிக்கப்பட்டு இவர்கள் மூலம் அனைத்து குடிநீர் ஆதாரங்களுக்கும் தர பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

குடிநீர் தரப்பரிசோதனையின் அனைத்து விவாதங்களும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் இதற்கென உருவாக்கப்பட்ட இணைய தளத்தில் உடனுக்குடன் சேர்க்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர். என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் குடிநீர் மாதிரிகள் பரிசோதனை செய்து காண்பிக்கப்பட்டது.

இப்பேரணியில்  மாண்புமிகு மாநகர மேயர் திருமதி.சாவித்திரிகோபால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தலைமைப் பொறியாளர் திரு.டி.பழனியப்பன், மேற்பார்வை பொறியாளர் திரு.ஏ.பி.ராஜசேகர், நிர்வாக பொறியாளர் திரு.வி.ராமலிங்கம், உதவி நிர்வாக பொறியாளர் திரு.வி.சுப்பிரமணியன் மற்றும் ஏராளமான கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

கால்வாய்லே தோல்வியுற்று உருப்படாமல் போனது இந்த கால்வாய்தான்.
இந்த புகைப்படத்தில் காணும் கால்வாய், ஆலடித்தெரு முகைதீன் பள்ளிக்கு மிக மிக அருகாமையில் இருக்குது, இது சதா காலமும் இப்படித்தான் இருக்குது, இது 21-வது வார்டுக்கு உட்பட்டு இருக்குது, இந்த கால்வாயை சுற்றி நிறைய வீடுகள் இருக்குது, எல்லா வீடுகளிலும் மக்கள் வசித்துக் கொண்டு இருக்குது, (இருக்கின்றார்கள்)

இப்படியே “இதுக்குது என்ற வார்த்தையைக் கொண்டு ஒரு படலமே எழுதலாம். எழுதுவது நோக்கம் இல்லே..............! விடிவு காலம் எப்போது...?

பெரிய ஒரு கேள்விக் குறி எழுந்து இருக்குது.

அப்பகுதியில் உள்ள மக்களை கேட்டால்.......................!!!!!!!!!

யாருமே சொல்ல மாட்டேங்கிறாங்க.. அப்போ எப்படிங்க உருப்படும்? இப்படி சிலர்.

இதனால் பெரிய நோய் ஆபத்து வர இருக்குது  இப்படி சிலர்.

இன்னும் பலர் வந்து “இந்த வார்டு மெம்பெர் பத்து வருஷமா மெம்பரா ஈக்கிராறு தினமும் அவர் வந்து பார்த்துட்டு மட்டும் போறாரு

இருக்குது, உருப்படும், ஈக்கிது, இருக்கிறாரு, போறாரு இதெல்லாம் கதைக்கு வேண்டும் என்றால் சிரிக்கலாமே தவிர, இந்த வாய்க்காலுக்காண நடவடிக்கை உடனே எடுக்கப்பட வேண்டும்.

சரியான நடவடிக்கை உடனே எடுக்கப்படுமா............?

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
PRESIDENT of pkt Tk
State Executive Member
National Consumer Protection Service Centre.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com