Pages

Saturday, June 4, 2016

ஏகோபித்த வரவேற்பை பெற்ற அதிரை நியூஸ் கல்வி - சாதனையாளர்கள் விருது விழா !

அதிராம்பட்டினம் ஜூன் 04
அதிரை நியூஸ் கல்வி விருது மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா நேற்று [ 03-06-2016 ] மாலை 5 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார்.

இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் முஹம்மது ஃபாதில் கிராத் ஓதி விழா துவங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி தாளாளர் டாக்டர் எம்.எம் சாகுல்ஹமீது கல்வி குறித்து சிறப்புரை வழங்கினார்.

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளின் கல்வி நிறுவனங்களில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, முதல் 3 இடங்களை பெற்றுள்ள மாணவ மாணவிகள், பள்ளி அளவில் முதல் இடங்களை பிடித்துள்ள மாணவ, மாணவிகள் கல்விச்சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியை ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலை கழகம் பதிவாளர் டாக்டர் செ. சுப்பிரமணியன், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பி. சேகர், அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி புல முதல்வர் முனைவர் இளங்கோவன், காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் உதுமான் முகையதீன் ஆகியோர் பரிசுகள் மற்றும் சாதனை விருதுகள் வழங்கி கெளரவித்தனர்.

முன்னதாக ஜமீல் எம் ஸாலிஹ் வரவேற்புரை ஆற்றினார். அதிரை சமூக நல அறக்கட்டளை குறித்து அறிமுக உரையை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மஹ்பூப் அலி ஆற்றினார்.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம். ஏ முஹம்மது அப்துல் காதர் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.

விழாவில்  நமதூர் பகுதியின் ஏழை மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அதேபோல் நமதூர் ஒவ்வொரு பள்ளிகளில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் ஆங்கிலப் பாடப்பிரிவுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழா முடிவில் அபுல் ஹசன் சாதலி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள், ஏராளமான கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அதிரை சமூக நல அறக்கட்டளை மற்றும் அதிரை நியூஸ் கல்வி விருது விழா குழுவினர் செய்தனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...