Pages

Sunday, June 5, 2016

காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களுக்கு சிறந்த கல்வி நிறுவன விருது !

அதிராம்பட்டினம், ஜூன் 05
அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி - சாதனையாளர்கள் விருது 2016' வழங்கும் விழா நேற்று முன்தினம் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்கள் சிறந்த கல்வி நிறுவனம் விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கபபட்டது.

தஞ்சவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் புகழ்பெற்ற வணிகரும், நிலக்கிழாரும், அறிவுள்ளம் படைத்த பெருந்தகையுமான, மறைந்த ஹாஜி ஜனாப் எம்.கே.என்.காதிர் முகைதீன் மரைக்காயர் அவர்கள் 1900 ஆம் ஆண்டு தனது நன்செய், புன்செய் நிலங்களை அறத்திற்காக வழங்கி எம்.கே.என்.மதரஸா என்ற அறநிலையத்தை தோற்றுவித்தார்கள். அன்னாரைப் பின்பற்றி அன்னாரின் உடன்பிறப்புகளான சகோதரர்கள்,

1) நெய்னா முகம்மது லெப்பை மரைக்காயர், 2)  எம்.கே.என்.அகமது தம்பி மரைக்காயர், 3) ஹாஜி எம்.கே.என்.சேக் சலாத் லெப்பை மரைக்காயர் ஆகியோரும் தங்கள் நன்செய்,புன்செய் நிலங்களை நன்கொடையாக வழங்கி உதவினார்கள்.

இந்த அறநிலைய நிர்வாகத்தின் கீழ் காலஞ்சென்ற தாளாளர் அதிரை கல்வித்தந்தை ஹாஜி  எஸ்.எம்.எஸ். சேக் ஜலாலுதீன் அவர்கள் தன்னுடைய சீரிய முயற்சியால் காதிர் முகைதீன் பள்ளி துவங்கப்பட்டது.

1) முதலில் 25.06.1949 இல் நடுநிலைப்பள்ளியாக (6 முதல் 8 ஆம் வகுப்பு வரை) இருபாலர்களுக்கும் மறைந்தமர்ஹூம் காயிதே மில்லத் ஜனாப். முகம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது.

2) பிறகு 1950 ஜூன் மாதம் முதல் உயர் நிலைப்பள்ளியாக (6 முதல் 11 ஆம் வகுப்பு வரை) முன்னேறியது.

3) பின்பு 01.07.1978 முதல் இன்று வரை அரசு உதவிப்பெறும் மேல் நிலைப்பள்ளியாக (12 ஆம் வகுப்பு வரை) வளர்ந்ததுள்ளது.  

கல்வியில் பின்தங்கிய அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்களுக்கு சாதி மத வேறுபாடு இன்றி கல்வி அளித்து இப்பள்ளி வைர விழாக் கண்டுள்ளது. தற்போது காலச்சூழ்நிலையை கருத்தில் கொண்டு இருபாலர் பள்ளியாக இருந்த இப்பள்ளியிலிருந்து பெண்களை பிரித்து பெண்களுக்கென்று தனியொரு மேல்நிலைப் பள்ளியை துவக்கி, இப்பள்ளி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக மாற்றம் செய்யப்பட்டு கல்விப்பணி செய்து வருகிறது.

இத்துடன் இவ்வறநிலையத்தின் ஆதரவில் செயல்பட்டு வரும் இப்பள்ளியின் உடன்பிறந்த கல்வி நிறுவனங்கள்,

சலாஹிய்யா அரபிக் கல்லூரி, காதிர் முகைதீன் கல்லூரி, காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என தனது கல்விச்சேவையை அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது.

விருதினை திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி தாளாளர் முனைவர் எம்.எம் சாகுல் ஹமீது அவர்கள் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ. மஹ்பூப் அலி அவர்களிடம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...