Pages

Monday, June 6, 2016

சிறந்த 'தொழில் முனைவோர்' விருது பெற்ற M.S முஹம்மது அலி !

அதிராம்பட்டினம், ஜூன் 06
அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி - சாதனையாளர்கள் விருது 2016' வழங்கும் விழா 03-06-2016 வெள்ளிக்கிழமை மாலை அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருது அல்-நூர் ஹஜ் சர்வீஸ் இந்தியா பி(லிட் ) மற்றும் ரிச்-வே கார்டன் ரெஸ்டாரண்ட் நிறுவனர் M.S முஹம்மது அலி அவர்களுக்கு வழங்கப்பட்டது. விருதினை தஞ்சாவூர் தமிழ் பல்கலை கழக பதிவாளர் முனைவர் செ. சுப்பிரமணியன் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

உழைப்பே உய்ர்வென்ற தாரக மந்திரத்தின் வாழும் உதாரணம், ஒற்றை நாணயத்தை மூலதனமாக்கி கோடீஸ்வரராகும் கதைகளப் போலல்லாமல் உழைப்பையும் உண்மையையும் இறை நம்பிக்கையையும் மட்டுமே மூலதனமாக்கி உயர்ந்தவர் நம்மூர் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த முஹமது சாலிஹ் அவர்களின் புதல்வர் முகமது அலி அவர்கள்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தில் பிறந்து சிறு வயதிலேயே ஊர் விட்டு ஊர் சென்று உழைக்கத் துவங்கியவர் ஓய்வென்ற சொல்லுக்கு அர்த்தம் அறியாதவர். அன்று துவங்கிய ஓட்டம் தொடர் ஓட்டமாகவே தொடர்கிறது.

அதிரையின் எழுதப்படாத விதியாகிய திரைகடலோடி திரவியம் தேடும் பாரம்பர்யம் இவரை நம் புனிதத் தளமாம் மக்கா நகரில் கொண்டு போய்ச்சேர்க்க அங்கு இவர் தமது கடும் வேலைகளுக்கு இடையே தன்னார்வத் தொண்டாகத் துவங்கியதுதான் ஹாஜிகளுக்கான சேவை.
அதுவே இவர் மனதில் ஆழமாகக் குடிகொண்டதால் ஊருக்கு வந்து அல்நூர் ஹஜ் சர்வீஸ் என்று ஹாஜிகளுக்கான ஹஜ் மற்றும் உம்ரா சேவையை அங்கீகாரத்தோடு செய்யத் துவங்கி இன்று தமிழ்நாட்டின் தலையாய ஹஜ் சேவை நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

நமதூருக்கு லேண்ட் மார்க்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்கத்திலும் தூய்மையான குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் ஒலிம்பிக் வாட்டர் கம்பெனியைத் துவங்கி நடத்தி வருகிறார்.

தொடர்ந்து நம் சுற்றுவட்டரத்தில் எங்குமே அமையப்பெறாத மிகப் பிரமாண்டமான ரிச்வே கார்டன் ரெஸ்டொரெண்டையும் கதிஜா மஹாலையும் துவங்கி நம்மூரை பிரபல்யப்படுத்திவரும் முஹமது அலி அவர்கள் தம் தொழிகளில் லாப நோக்கைவிட சேவை மனப்பாண்மையும் ஊருக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்கிற நன்நோக்கும் இருப்பதை இவரை அறிந்தவர்கள் நன்கு உணர்வர்.  மேலும் சமூகத்திற்கும் எளியோருக்கும் சேவை நிறுவனங்ககளுக்கும் சப்தமின்றி உதவி வரும் சகோதரர் முஹமது அலி அவர்களை இவ்வருடத்திற்கான தொழில் முனைவோரில் சிறந்தவராக அறிவிப்பதில் அதிரை நியூஸ் பெருமிதம் கொள்வதோடு முஹமது அலி அவர்களின் தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறது.

1 comment:

  1. கடும்உழைப்பாளி குறுக்கு வழியில் பணம் தேடாதவர் இறக்கமனம் கொண்டவர். அதிரை நியூஸ்சின் தேர்வு நல்லதேர்வு.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...