Pages

Monday, July 4, 2016

பட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளர் மனோகரன் கொலையில் தொடர்புடைய 13 பேர் போலீசில் சிக்கினர் !

பட்டுக்கோட்டை, ஜூலை 04
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் நேற்று மாலை தி.மு.க பட்டுக்கோட்டை நகர பொறுப்பாளர் தங்க.மனோகரன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  இது குறித்து, மனோகரனின் அண்ணன் மகன் பாரிவேல் கார்த்தி பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். கொலை குற்றவாளிகளை போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த எடையூர் காவல் நிலையம் முன்பு சிறப்பு உதவி ஆய்வாளர் அசோகன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்பொழுது வேகமாக சந்தேகத்திற்கு இடமாக சென்ற கார் ஒன்றை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது வாகனத்தில் 13 பேர் இருந்தனர். இவர்கள் அனைவரும் பட்டுக்கோட்டை தி.மு.க பிரமுகர் தங்க.மனோகரன் கொலையில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து அறிவாள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் பட்டுக்கோட்டை போலீசாருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைத்து அவர்களிடம் எடையூர் போலீசார் 13 பேரையும் ஒப்படைத்தனர். இச்சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...