Pages

Wednesday, July 13, 2016

தஞ்சையில் 15 ந் தேதி புத்தக திருவிழா தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் அழைப்பு !

தஞ்சாவூர் அரண்மனை மைதானத்தில் 15.07.2016 அன்று புத்தக திருவிழா தொடங்கவுள்ளது.  மாவட்டத்தில் உள்ள அனைவரும் திரண்டு வந்து பார்வையிட்டு பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நடைபெறவுள்ள புத்தக திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 
தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம், இந்துசமய அறநிலையத்துறை, தமிழ் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் கழகம், மாவட்ட தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் ( BAPASI ) மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மாபெரும் புத்தக கண்காட்சியினை தஞ்சாவூர் அரண்மனை வளாகததில் நடத்துகின்றது.

பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பயன் பெறும் வகையில் 15.07.2016 முதல் 25.07.2016 முடிய தஞ்சாவூர் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.  இப்புத்தக திருவிழா காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். நுழைவுக் கட்டணம் கிடையாது.

விவசாயம் சார்ந்த பகுதியாக இருப்பதால், விவசாயம் சார்ந்து மட்டும் பேசாமல் அறிவுத் தேடலுக்கு அறிவு சார்ந்த இது போன்ற புத்தகத் திருவிழா நடத்தப்பட வேண்டும்.  இதன் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் வன்முறையற்ற சமுதாயம் அமைய  அனைவரும் படிப்பது அவசியமாகும்.

இப்புத்தகத் திருவிழாவில் 120க்கு மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் பல்வேறு தலைப்புகளில் தினசரி சொற்பொழிவு ஆற்ற உள்ளார்கள்.  தினசரி பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சி, கலந்துரையாடல் நிகழ்ச்சி, வினாடி வினா போட்டி, பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, ஓவியப் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெறும். சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளது.   மாணவ மாணவியர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கான பல்வேறு புத்தகங்கள் இப்புத்தக கண்காட்சியில் இடம் பெற உள்ளன.

இப்புத்தக கண்காட்சியில் பல்வேறு முதன்மையான பதிப்பகத்தரால் வெளியிடப்பட்டுள்ள அறிவியல், தொழில் நுட்பம், வரலாறு, பொது அறிவு போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்த புத்தகங்கள் இடம் பெற உள்ளன. ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தலைப்புகளில் 10 இலட்சத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெறவுள்ளன. மேலும், 10 ஆயிரம் புதிய தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெறவுள்ளன.

கடந்த முறை நடைபெற்ற புத்தக திருவிழா பொது மக்கள் மற்றும் மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் இம்முறையும் பொது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இந்த புத்தக திருவிழா அமைந்திருக்கும். புத்தக திருவிழாவில் பொது மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த புத்தக திருவிழாவில் சிறப்பு பேச்சாளர்கள் முனைவர் வெ.இறையன்பு, திரு.த.உதயசந்திரன, திரு.சுகிசிவம், திரு.கு.ஞானசம்பந்தம், திரு.பாரதிகிருஷ்ணகுமார், மரு.சங்கரசரவணன், திரு.த. ஸ்டாலின் குணசேகரன், திரு.சு.வெ,ங்கடேஷ், திரு.முத்தையா, திரு.பி.மணிகண்டன் மற்றும் திருமதி.பாரதிபாஸ்கர் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கவுள்ளார்கள்.

எனவே, பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் இந்த புத்தகத் திருவிழாவில் பங்கேற்று தங்களின் அறிவுத் திறனை வளர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் திரு.சி.குமரதுரை, உதவி ஆணையர் திருமதி.க.ரமணி, சுற்றுலாத்துறை அலுவலர் திரு.ராஜசேகரன், BAPASI நிர்வாகிகள் திரு.மயில்வாகனன், திரு.முருகன். ஆகியோர் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...