Pages

Tuesday, July 5, 2016

பிலால் நகரில் 200 பயனாளிகளுக்கு 1050 கிலோ பித்ரா அரிசி விநியோகம் !

ஏழை, எளிய, நலிவடைந்த உள்ளூர் பொதுமக்கள் பயனுறும் வகையில் வட்டியில்லா நகைக் கடன் வழங்கும் திட்டம், கைவிடப்பட்ட முதியோர்கள், விதவைகள் ஆகியோருக்கான பென்ஷன் வழங்கும் திட்டம், ஏழைக்குமர்களுக்கான திருமண உதவி வழங்கும் திட்டம், வறிய  மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி வழங்கும் திட்டம் மற்றும் மருத்துவ உதவி சிறுவர்களுக்கு ஹத்னா செய்தல் ஆகியன அதிரை பைத்துல்மால் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புனிதமிகு ரமலான் மாதத்தில் நல்லுள்ளம் படைத்தவர்கள் அதிரை பைத்துல்மாலுக்கு வாரி வழங்கும் பித்ரா நிதி உதவியைக் கொண்டு அதிராம்பட்டினம் அனைத்து மஹல்லா பகுதியை சேர்ந்த ஏழை எளியோருக்கு தரமான அரிசி விநியோகிக்கப்படுகிறது.

இதில் பிலால் நகர் பகுதியை சேர்ந்த நலிவடைந்த குடும்பங்களுக்கு குறிப்பாக கணவனால் கைவிடப்பட்டோர், விதவை, முதியோர், மாற்றுத்திறநாளிகள் உள்ளிட்ட 200 ஏழை குடும்பங்களுக்கு 1050 கிலோ பித்ரா அரிசி விநியோகிக்கப்பட்டது. 

முன்னதாக அதிரை பைத்துல்மால் சார்பில் பயனாளிகளுக்கு டோக்கன்
வழங்கப்பட்டன. பின்னர் டோக்கனை செலுத்திவிட்டு அரிசியை பெற்றுச்சென்றனர். இதன் ஏற்பாடுகளை அதிரை பைத்துல்மால் செயலாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது மற்றும் பிலால் நகர் பொறுப்பாளர்கள், பிலால் ( ரலி ) பள்ளி நிர்வாகிகள், இந்த பகுதியை சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள் இணைந்து செய்தனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...