Pages

Sunday, July 10, 2016

அதிரை ஈசிஆர் சாலை வாகன விபத்தில் மூதாட்டி உட்பட 4 பேர் பலத்த காயம் ! [ படங்கள் ]

அதிராம்பட்டினம், ஜூலை 10
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் புதுத்தெரு தைக்கால் பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன் ( வயது 30 ) இவரது மனைவி நஸ்ரின் பானு ( வயது 26 ), இவர்களது 3 மாத குழந்தை, மூதாட்டி பாத்திமா கனி ( வயது 70 ) இவர்கள் அனைவரும் புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு டாடா ஏஸ் வாகனத்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். வாகனம் அதிரை ஈசிஆர் சாலை பெரிய ஏரி அருகே வந்த போது, அதே சாலையில் தஞ்சை மாவட்டம், ராஜாமடம் பகுதியிலிருந்து வயலில் உழுது விடும் பணிக்காக டிராக்டர் வாகனம் முத்துப்பேட்டை அருகே உள்ள எடையூர் கிராமத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்பொழுது டிராக்டர் வாகனத்தின் டயர் திடீரென வெடித்ததில் பின்புறமாக வந்த டாடா ஏஸ் வாகனத்தின் முன்புற கதவில் டிராக்டர் கலப்பை பயங்கரமாக மோதியது. இதில் வாகனத்தில் பயணித்த மூதாட்டி  பாத்திமா கனி கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வாகனத்தில் பயணித்த நஸ்ரின் பானுக்கு மார்பு பகுதி, தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. வாகனத்தை ஓட்டி வந்த  சிராஜுதீன் அதிர்ச்சியில் மயக்க நிலை அடைந்தார். உடனே சாலையில் விழுந்து கிடந்த குழந்தை உட்பட காயங்கள் ஏற்பட்ட அனைவரும் மீட்கப்பட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு மருத்துவர் கார்த்திகேயன் முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் உயர் சிகிச்சைக்காக அரசின் 108 மற்றும் அதிராம்பட்டினம் தமுமுக ஆம்புலன்ஸ்களில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து குறித்து தகவலறிந்த அதிராம்பட்டினம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆசைதம்பி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். டிராக்டர் வாகனம் ராஜாமடம் அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...