Pages

Thursday, July 21, 2016

அதிரையில் புனிதமிகு ரமலான் மாதத்தில் 96.70 சதவீதம் தடையில்லா மின்சாரம் விநியோகம் !

அதிராம்பட்டினம், ஜூலை 21
புனிதமிகு ரமலான் மாத நோன்பு தினங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க கோரி சமூக ஆர்வலர் கே.எம்.ஏ. ஜமால் முஹம்மது அவர்கள் அதிராம்பட்டினம் மின்சார வாரிய உதவி செயற்பொறியியாளர் திரு. பிரகாஷ் அவர்களை கடந்த 13-06-2016 அன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இதில் ரமழான் மாதம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கவும், மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏற்படும் மின்தடையை தவிர்க்கவும், அதிரை மின்சார வாரிய அலுவலகத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மின்சார வாரிய உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை கடிதங்கள் அனுப்பியதன் எதிரொலியாக அதிராம்பட்டினம் மற்றும் மதுக்கூர், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் மாதம் நடைபெற இருந்த மின்தடை விலக்கிக்கொள்ளப்பட்டதை அடுத்து கோரிக்கையின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கடிதங்கள் அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில் புனிதமிகு ரமலான் மாதத்தில் அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின்சாரம் தடையில்லா நேரங்கள் மற்றும் தடையான நேரங்களை துல்லியமாக கணக்கீடு செய்து நமக்கு வழங்கியுள்ளார். இதில் 96.7 சதவீதம் மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

2 comments:

  1. Mr Jamal Mohammed do not support to JE of EB Department in future. In Ramadan time every day power cut.JE was cheating Adirai people. We are trying to transfer him from adirampattinam. Insha Allah it will soon because he worked here up to 6 years.

    ReplyDelete
    Replies
    1. சிரித்து வாழவேண்டும், பிறர் சிரிக்க வாழக்கூடாது. உண்மையான பெயரில் பின்னூட்டம் இடவேண்டும். இப்படி “அன்நோன்” என்ற பெயரில் பின்னூட்டம் இடக்கூடாது.

      இது என்ன “அன்நோன்” மறைந்து கொண்டு பின்னூட்டம் இடுவது, நீங்கள் வீரியம் உள்ள ஒழுங்கான விந்துக்கு பிறந்தவர் என்றால் ஒழிவு மறைவு இல்லாமல் நேராக வரலாமே.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...