Pages

Wednesday, July 13, 2016

உள்ளாட்சி தேர்தலில் அதிரை - மதுக்கூர் பேரூராட்சிகளில் போட்டியிட மமக முடிவு: எம்.கபார் அறிக்கை !

மதுக்கூர், ஜூலை 13
உள்ளாட்சி தேர்தலில் அதிரை - மதுக்கூர் பேரூராட்சிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட முடிவு செய்யபப்ட்டுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி தஞ்சாவூர் (தெற்கு) மாவட்ட செயலாளர் எம். கபார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்..

இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக் அவர்களை கைது செய்ய சதி வலை செய்யும் மகாராஷ்டிர அரசும், மத்திய அரசும் டாக்டர் ஜாகிர் நாயக் தொடர்பாக தங்களுடைய நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் மனிதநேய மக்கள் சார்பாக அதிராம்பட்டினம், மதுக்கூர் ஆகிய பேரூராட்சிகளில் தலைவர் பொறுப்புக்கு, மற்ற பகுதிகளில் வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர் போன்ற பொறுப்புகளுக்கும் போட்டியிடப்படும்.

டெல்டா மாவட்ட விவாசாயிகளின் உயிர்நாடியான விவசாயத்திற்கு உடனடியாக காவிரி நீரை திறக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மத்திய அரசை வலியுறுத்தவேண்டும். மீத்தேன் எடுக்கும் திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும். என இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...