Pages

Friday, July 8, 2016

அஜ்மான் மருத்துவமனைக்கு மாத்திரைகளை சேகரித்து நன்கொடையாக வழங்கும் பள்ளி மாணவர் !

அஜ்மான், ஜூலை 08
அஜ்மானில் அல் இக்சான் சேரிட்டி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை குறைந்த செலவில் வசதியற்றவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. இதனால் இந்த மருத்துவமனைக்கு மருத்துவ உப கரணங்கள், உபயோகித்து மீதம் உள்ள மாத்திரைகள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் நன்கொடையாக வழங்கி வருகின்றனர். இதனை இலவசமாக மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை பெற வருபவர்களுக்கு வழங்கி வருகிறது.

துபாயில் உள்ள பள்ளியில் பயின்று வரும் மாணவர் விவேகானந்தன். அவர் ஷேர் இன் கேர் என்ற நூலகத்தை நடத்தி வருகிறார். இந்த நூலகத்தில் உறுப்பினர்களாக இருந்து வரும் நண்பர்களிடம் இந்த மருத்துவமனை குறித்து தெரிவித்தார். அந்த மருத்துவமனைக்கு நம்மால் இயன்ற வகையில் மாத்திரைகளை சேகரித்து வழங்க வேண்டும் என்றார். இதன் அடிப்பையில் சுமார் 50 கிலோ அளவுக்கு மாத்திரைகளை சேகரித்து மருத்துவமனை அதிகாரி லத்திபாவிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை மருத்துவர்கள், பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மருத்துவனை டாக்டர்கள் தமிழக  மாணவரின் சமுதாய சேவையினை பாராட்டினர்.

இதேபோல் அமீரகத்தில் உபயோகித்தது போக தங்களது வீட்டில் உள்ள மாத்திரைகளை நன்கொடையாக வழங்க விரும்புவோர் 050 51 96 433 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கொடுக்கலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...