Pages

Friday, July 15, 2016

தஞ்சையில் புத்தக திருவிழா தொடக்கம் ! [ படங்கள் ]

தஞ்சாவூர் அரண்மனை மைதானத்தில் புத்தக திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

புத்தக திருவிழாவினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:
பாரம்பரியம்மிக்க தஞ்சாவ10ர் புத்தக திருவிழா (15.07.2016) இன்று தொடங்கி 25.07.2016 வரை நடைபெறவுள்ளது. இப்புத்தக திருவிழா மூலம் பொது மக்கள் புத்தகங்களை பெற்று வாசிக்கும் திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

இப்புத்தக அரங்குகளில் கருத்தாலமிக்க புத்தகங்கள் நிறைய இடம் பெற்றுள்ளன.  தஞ்சாவூரில் வரலாற்று அடையாளங்களில் ஒன்றான புத்தக திருவிழா இடம் பெற வேண்டும்.

தஞ்சாவ10ர் சரஸ்வதி மஹால் நூலகம்,இந்துசமய அறநிலையத்துறை, தமிழ் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் கழகம், மாவட்ட தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள்  சங்கம் (BAPASI) மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மாபெரும் புத்தக கண்காட்சியினை தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நடத்தி வருகின்றார்கள். இப்புத்தக திருவிழா காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.  நுழைவுக் கட்டணம் கிடையாது.

இப்புத்தகத் திருவிழாவில் 120க்கு மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் பல்வேறு தலைப்புகளில் தினசரி சொற்பொழிவு ஆற்ற உள்ளார்கள்.  தினசரி பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சி, கலந்துரையாடல் நிகழ்ச்சி, வினாடி வினா போட்டி, பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, ஓவியப் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெறும். சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளது.  

இன்று மாலை நடைபெறவுள்ள கருத்துரையில் அன்பிற் சிறந்த தவமில்லை என்ற தலைப்பில் எழுத்தாளர், இயக்குநர் திரு.பாரதி கிருஷ்ணகுமார் கருத்துரை வழங்குகின்றார்கள்.

மேலும் இந்த புத்தக திருவிழாவில் சிறப்பு பேச்சாளர்கள் முனைவர் வெ.இறையன்பு, த.உதயசந்திரன், திரு.சுகிசிவம், திரு.கு.ஞானசம்பந்தம், மரு.சங்கரசரவணன், திரு.த. ஸ்டாலின் குணசேகரன், திரு.சு.வெங்கடேஷ், திரு.முத்தையா, திரு.பி.மணிகண்டன் மற்றும் திருமதி.பாரதிபாஸ்கர் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கவுள்ளார்கள்.

இவ்வரங்கினுள் புத்தகம் வாங்குபவர்களின் வசதிக்காக தங்கள் வங்கி கணக்கிலிருந்து ரூ.1000 வரை பெறும் வசதியினை பாரத வங்கி ஏற்பாடு செய்துள்ளது.

எனவே, பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் இந்த புத்தகத் திருவிழாவில் பங்கேற்று தங்களின் அறிவுத் திறனை வளர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆர்.சுதாகர், சுற்றுலாத்துறை அலுவலர் திரு.ராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திருமதி.சித்ரா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.என்.கோபு, BAPASI நிர்வாகிகள் திரு.மயில்வேலன்,  திரு.முருகன். ஆகியோர் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...