Pages

Thursday, July 14, 2016

பட்டுக்கோட்டையில் தமுமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பலர் பங்கேற்பு !

பட்டுக்கோட்டை, ஜூலை 14
இஸ்லாமிய மார்க்க பிரசாரகர் ஜாகிர் நாயக் மீது அவதூறு பரப்பும் மத்திய அரசை கண்டித்தும், உடந்தையாக இருக்கும் மகாராஷ்டிர அரசை கண்டித்து தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் இன்று வியாழக்கிழமை மாலை பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை அஹமது ஹாஜா தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் எம். கபார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாநில செயலாளர் பழனி பாருக் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

அதிராம்பட்டினம், மதுக்கூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான தமுமுகவினர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் இஸ்லாமிய விரோதப் போக்கை கண்டித்து முழக்கமிட்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...