Pages

Tuesday, July 12, 2016

ஒரு மாதம் !

ரமளானே!
ஆயிர மாதத்தை உள்ளடக்கி
எம்மிடம் வந்தாய்
நாங்கள் பூரிப்போடு
நாடினோம்! இறையில்லம்
கூடினோம்!

விருந்திற்கு நிறைந்திருந்த
இடம்போல
நிறைந்திருந்தது கூட்டம்
பள்ளிவாசலில்!

முடிந்ததும் விருந்து
கூட்டம் மறைந்தது போல,
'ஒருமாதம் 'விரைந்ததும்
காகங்கள் கூடிக்கரைந்
துண்டு பறந்தோடினாற்போல
விசுவாசிகளின் கூட்டம்
மறைந்தே போனது
பள்ளியை விட்டு!

ஷவ்வால் பிறையும்
ஷந்தோ ஷமாகத் தானே
வந்தது,
இனிய உணவுகளையும்
எழிலான உடைகளையும்
இன்பத் தழுவல் களையும்
அள்ளித் தரத்தான்
செய்தது!
அப்பிறையைக் கண்டு
புலியைக் கண்டு
புறமுதுகுக் காட்டினாற்
போல
ஓடிவிட்டார்கள்
எங்குதான் போனார்கள்!

சூதாடியவர் பலர்
சுருட்டி வைத்தார்கள்,
மதுக்கள்ளன் அதைவிட்டு
மறைந்தே வாழ்ந்தான்

வட்டிவாங்கியவன் விட்டொதிங்கி
பெட்டிப்பாம்பாய் அடங்கினான்
விட்டு ஒதுங்கினான்
பொய் உரைத்தோர் புறம்
பேசினோர், கோள் மூட்டினோர்
கூட்டுக்குள் அடங்கியப்
பறவைகள் யானார்கள்

கோதில்லா தஸ்பீஹீ மணியை
நாவிலே அணியாய்ப் பூட்டினர்!
இரவில் தொழுகை,
இன்பகல் தொழுகை,
இறைதியானம், மறைஞானம்
கற்றல் -ஓதுதல்
தராவீஹ் தொழுகை
தஹஜ்ஜத் தொழுகை

மனைவி மரக்கட்டைபோல
காட்சி
தண்ணீர் வற்றிப்போன நிலை
உண்ணாமலும், பருகாமலும்
ஒதுங்கினர்
உள்ளத்தில் உறுதியேற்றினர்
இல்லறத்திலே
துறவறத்தை சமைத்தது
ரமளான் மாதம்!

ஐங்காலத் தொழுகையை
அகங்குளிர ஏற்றனர்
ஐம்புலன்களை
அரிதாய் அடக்கினர்

நடுநிசிவரையும் பள்ளியின்
தொடர்பு,
நாட்கள் தோறும்
நல்லவர் தொடர்பு
நயந்து வணங்கி
நல்லிறைத் தொடர்பு

எப்போதும் இருக்கணும்
அப்படித்தானே!
இப்போது தீனோர்
ஏகினர் எங்கே?

தொழுகையும் நோன்பும்
துயர்தீர் தருமம்
ஒருமாதத்திற்கு மட்டுமா?
இது
ஈமான் உள்ளவர்களின்
செயலா?

மற்ற மாதங்களில்
இறைவன் இல்லையா?

நாள்தோறும்
வணங்கி வாழவும்
வழங்கி வாழவும்
மற்றவரோடு
இணங்கி வாழவும்
பிறந்த விசுவாசிகளே!
வழிவிட்டுப் போகலாமா?
வாருங்கள் பள்ளிவாசல்
நோக்கி!


'கவிஞர்' அதிரை தாஹா
ஓய்வுபெற்ற ஆசிரியர்
கவிஞர் - எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...