Pages

Tuesday, July 12, 2016

அதிரையில் எம்.எல்.ஏ சி.வி சேகர் திடீர் ஆய்வு ! [ படங்கள் ]

அதிராம்பட்டினம், ஜூலை 12
தஞ்சை மாவட்டம் பேராவூரணி, பெருமகளூர், அதிரை ஆகிய பேரூராட்சிகள், பட்டுக்கோட்டை சேதுபாவா சத்திரம், பேராவூரணி, மதுக்கூர், பாபநாசம், திருவையாறு ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 1,153 குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க கடந்த [ 09-04-2012 ] அன்று நடந்த சட்டசபைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக 2012 & 2013 ஆம் ஆண்டுக்கான அறிவிப்பு வெளியிட்டு இதை செயல்படுத்துவதற்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணி நிறைவேற அதிரை பேரூராட்சி சார்பிலும் நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் கூட்டு குடிநீர் திட்டத்தின் இறுதி கட்ட பணிகள் அதிராம்பட்டினம் பகுதியில் தீவிரமாக நடந்து வருகிறது.  இதன் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ இன்று மாலை அதிராம்பட்டினம் வருகை தந்தார். வண்டிப்பேட்டை பகுதியில் நடந்து வரும் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அதிரை பேரூராட்சி 2 வது வார்டு பகுதி சால்ட் லேன் பிரதான சாலையின் குறுக்கே உடைந்து போன பாலம், மதுக்கூர் சாலையில் நடந்து வரும் கும்பகோணம் - அதிராம்பட்டினம் இணைப்பு சாலை பணிகள் உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது அதிமுக பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் அதிரை அப்துல் அஜீஸ், தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சேதுராமன், அதிரை பேரூர் செயலாளர் பிச்சை, துணை செயலாளர் முஹம்மது தமீம், வார்டு கவுன்சிலர்கள் உதயகுமார், சிவக்குமார், வார்டு பொறுப்பாளர்கள் ஹாஜா பகுரூதீன், அபூபக்கர், முஹம்மது ஸாலிஹ், அ.மு அப்துல் வஹாப், லியாகத் அலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 
 
 
 

 
  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...