Pages

Saturday, July 9, 2016

ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் பள்ளி மாணவர்கள் கெளரவிப்பு !

அதிராம்பட்டினம், ஜூலை 09
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் 2016-2017 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி அதிரை பவித்ரா திருமண மஹாலில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் எம். நடராஜன் தலைமை வகித்து வரவேற்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரோட்டரி சங்க மண்டலம் பதினாறு உதவி ஆளுநர் பஞ்சாபிகேசன் வாழ்த்துரை வழங்கி, புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தினார். இதில் தலைவராக எம். வெங்கடேசன், செயலராக ஜி. சந்திரசேகர், பொருளாளராக டி. முஹம்மது நவாஸ்கான் ஆகியோர் பொறுப்பேற்றனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தஞ்சை பாரத் கல்வி குழுமம் தலைவர் ஜி. புனிதா கணேஷன், மெட்ரோ மாலிக், அதிரை பேரூராட்சி துணை தலைவர் ஏ.பிச்சை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக ரோட்டரி சங்க செயலர் கே. வைரவன் கடந்த ஆண்டில் ரோட்டரி சங்கம் ஆற்றிய சேவை திட்டங்கள் குறித்து பட்டியலிட்டு கூறினார்.

நிகழ்ச்சியில் கடந்த கல்வியாண்டில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளின் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. அனைவரும்மா மேடைக்கு வரவழைக்கப்பட்டு சிறப்பு பரிசும், கேடயம், சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மேலும் விழாவில் நலிவடைந்தோருக்கு நலத்திட்ட உதவியாக தையல் இயந்திரம், ஊராட்சி ஒன்றிய தொடக்கபபள்ளிக்கு நீர் தேக்க தொட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. விழா முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் ஜி. சந்திரசேகர் நன்றி கூறினார்.

விழா ஏற்பாட்டினை அதிராம்பட்டினம்  ரோட்டரி சங்க நிர்வாகிகள் செய்தனர். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தினர், அரசியல் பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், கிராம பஞ்சாயத்தார்கள், பத்திரிக்கையாளர்கள், சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் - ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
   
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...