பட்டுக்கோட்டை, ஜூலை 03
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் தங்க மனோகரன் ( வயது 60 ) பட்டுக்கோட்டை நகராட்சி 9 வது வார்டு கவுன்சிலர். கடந்த 25 ஆண்டுகளாக பட்டுக்கோட்டை நகராட்சி கவுன்சிலராகவும், ஒரு முறை நகராட்சி துணைத் தலைவராகவும் பொறுப்பில் இருந்துள்ளார்.
திமுக கட்சியை சேர்ந்த இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதிமுகவில் இணைந்தார். பின்னர் கடந்த ஆண்டு மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் மீண்டும் இணைந்தார். இணைந்த சில வாரங்களில் பட்டுக்கோட்டை நகர திமுக பொருப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை தங்க மனோகரன் தனது தோட்டத்திற்கு சென்று திரும்பிய போது கோட்டைக்குளம் அருகே சுமார் 7 க்கும் மேற்பட்ட கும்பல் தங்க மனோகரனை வழிமறித்து கழுத்து, தலை பகுதிகளில் பலமாக வெட்டியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்த மனோகரன் முகத்தில் கல்லை போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மனோகரனை மீட்ட பொதுமக்கள் தஞ்சையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போது மனோகரன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தகவலறிந்த பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பு - பதற்றம் நிலவி வருகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.