Pages

Tuesday, July 5, 2016

பெருநாள் இரவுகளில் ஏற்படும் மின் தடைக்கு யார் காரணம்?

கீழக்கரை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊர்களில் பெருநாள் போன்ற பண்டிகை காலங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதற்கு மின்வாரியத்தின் அலட்சியப்போக்கே காரணம் என்கின்றனர் பொதுமக்கள்.

இதுபற்றி மின்வாரியத்திடம் கேட்டால்...ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பவர் சப்ளை செய்யும் டிரான்ஸ்ஃபார்ம்கள் அமைத்திருப்போம்.

இது அந்த பகுதிகளின் வீடுகளில் பயன்படுத்தப்படும் சராசரி மின் அளவீட்டினை கணக்கிட்டு அதற்கு தகுந்தவாறு டிரான்ஸ்ஃபார்ம்கள் பராமரிக்கப்படுகின்றன.

பெருநாள் போன்ற இரவுகளில் வழக்கத்திற்கு மாறாக ஒவ்வொரு வீட்டிலும் கூடுதலாக பல்புகள் எரிய வைப்பதும்,அலங்கார லைட்டுகள் பயன்படுத்துவதும் போன்ற அதிக மின் உபயோகத்தால் லோடு தாங்காமல் குறிப்பிட்ட அந்த டிரான்ஸ்ஃபார்ம்களில் பியூஸ் போவதும் அல்லது டிரான்ஸ்ஃபார்ம்கள் புகைந்து விடுவதும் போன்ற நிகழ்வுகளே மின் தடைக்கு பெரிதும் காரணம் என்கின்றனர்.

எந்த சமுதாயத்தவராக இருந்தாலும் அவர்களது பண்டிகைகள் அவரவருக்கு மிகவும் முக்கியமாகும்.அது போன்ற நேரங்களில் மக்களுக்கான தேவைகள் அறிந்து அதற்கு தகுந்தாற்போல தடை இல்லாத மின் விநியோகம் வழங்க வேண்டிய பொறுப்பு மின்வாரியத்திற்கு உண்டு.

பண்டிகைகள் என்பது ஒவ்வொரு சமூகத்தினரின் மகிழ்வுக்கான தருணம். அந்த மகிழ்வுக்கு ஊறு விளைவிக்கும் எந்த செயலையும் மனிதாபிமானம் உள்ளவர்கள் செய்யமாட்டார்கள்.

இனிவரும் காலங்களிலாவது அனைத்து பண்டிகைகளுக்கும் தடை இல்லாத மின் விநியோகம் செய்து அனைத்து மக்களின் உள்ளங்களையும் குளிர்விக்க மின் வாரியம் முன் வர வேண்டுமென அன்புடன் வேண்டுகிறேன்.

கீழை ஜஹாங்கீர் அரூஸி
(முன்னாள் கவுன்சிலர்)

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...