Pages

Wednesday, July 13, 2016

அதிரையில் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி !

அதிராம்பட்டினம், ஜூலை 13
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் உள்ள பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

பேரணி தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் வீ. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். பேரணியை அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மனோகரன் கொடியசைத்து துவக்கி வைத்து சாலை பாதுகாப்பின் அவசியத்தைப் பற்றி எடுத்துக் கூறினார். வண்டிப்பேட்டை பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்பட்ட பேரணி, சேர்மன் வாடி பஸ் ஸ்டாப், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலை வழியாக காதிர் முகைதீன் கல்லூரி முக்கம் அருகில் முடிவடைந்தது.

பேரணியில் அதிரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ( தனிப்பிரிவு ) விஜய ஆனந்த், பிரிலியண்ட் சிபிஎஸ்சி பள்ளி மாணவர்கள், ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை ஏந்தி சென்றனர். பேரணியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய டி-சர்ட் பனியன்கள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது.  நிகழ்ச்சி ஏற்பாட்டினை பள்ளி மேலாளார் எஸ்.சுப்பையன் செய்தார்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...